ஆப்நகரம்

டி.வி. நடிகரால் பாலியல் தொல்லையை அனுபவித்த சீரியல் நடிகை சாண்ட்ரா!

பல தமிழ் சீரியல்களில் நடித்து வரும் நடிகை சாண்ட்ராவுக்கு, டிவி நடிகர் ஒருவரால் பாலியல் தொல்லை ஏற்பட்டதாக கூறியுள்ளார்.

Samayam Tamil 12 Oct 2018, 5:39 pm
‘சின்னத் தம்பி’ சீரியலில் ஹீரோவாக நடித்து வருபவர் பிரஜன். இவரின் மனைவிதான் சாண்ட்ரா. இருவருமே சீரியல்களில் நடித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக பாலியல் புகார் சர்ச்சை டுவிட்டரில் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. பாலிவுட்டில் தொடங்கிய மீடூ இயக்கம் தமிழகத்தில் சின்மயி மூலமாக கொளுந்துவிட்டு எரிகிறது.
Samayam Tamil sandra-amy


இதில் பிரபல சின்னத்திரை நடிகர் பிரஜனின் மனைவியும் நடிகையுமான சாண்ட்ரா தன்னுடன் நடித்த பிரகாஷ்ராஜன் என்பவர் பாலியல் ரீதியாக தன்னை அணுகியதாக கூறியிருந்தார். இவர் ‘தெய்வமகள்’ சீரியலில் காயத்ரியின் கணவராக நடித்துள்ளவர்.

நடிகை சாண்ட்ரா புகாருக்கு பதிலளித்துள்ள பிரகாஷ்ராஜன், ‘‘தான் எந்த தவறும் செய்யவில்லை. தன்னுடன் பணிபுரிந்த மற்ற பெண்களுக்கும், என்னைப்பற்றி தெரிந்தவர்களுக்கும் இது கண்டிப்பாக தெரியும். நீங்களும் என்னை நம்புங்கள்’’ என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்