ஆப்நகரம்

Meena: மகன் இல்லாத குறையை தீர்த்த மீனா.. இடுப்பில் துண்டுடன் கணவருக்கு இறுதிச்சடங்கு!

தனது கணவருக்கு தானே இறுதிச்சடங்குகளை செய்துள்ளார் நடிகை மீனா.

Samayam Tamil 30 Jun 2022, 9:43 am
தனது கணவருக்கு மகனாக இருந்து இறுதிச்சடங்குகளை செய்துள்ளார் நடிகை மீனா.
Samayam Tamil meena meena did last rites for her husband
Meena: மகன் இல்லாத குறையை தீர்த்த மீனா.. இடுப்பில் துண்டுடன் கணவருக்கு இறுதிச்சடங்கு!



உயிர் பிரிந்தது

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று முன்தினம் இரவு காலமானார். 48 வயதே ஆன வித்யாசாகர், நுரையீரல் தொற்றால் கடந்த 6 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.

Meena: அன்பு கணவரை இறுதியாய் ஆரத்தழுவி முத்தமிட்ட மீனா... கதறி அழுத பிரபலங்கள்!

மின் மயானம்

இதையடுத்து சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்ட வித்யாசாகரின் உடலுக்கு சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் நேற்று பிற்பகல் வீட்டில் இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு வித்யாசாகரின் உடல் அமரர் ஊதியில் ஊர்வலமாக சென்னை பெசன்ட்நகர் மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

Meena: வித்யாசாகர் 95 நாட்கள் சுயநினைவின்றி இருந்தார்... அமைச்சர் திடுக் தகவல்!

இடுப்பில் துண்டு

வீட்டில் வித்யாசாகருக்கு செய்யவேண்டிய இறுதி காரியங்களை நடிகை மீனாவும் அவரது மகள் நைனிகாவும் செய்தனர். தொடர்ந்து பெசன்ட் நகர் மின்மயானத்திலும் வித்யாசாகருக்கு செய்ய வேண்டிய இறுதிச்சடங்குகளை நடிகை மீனாவே செய்தார். இடுப்பில் துண்டைக் கட்டிக்கொண்டும் தோளில் துண்டால் போர்த்திக் கொண்டும் இறுதிச்சடங்குகளை செய்தார் மீனா.

Meena: வேதனையின் விளிம்பில் இருக்கும் நடிகை மீனா... விஜயகாந்த் உருக்கம்!

இறுதிச்சடங்கு செய்த மீனா

நடிகை மீனாவுக்கும் வித்யாசாகருக்கும் நைனிகா என்ற ஒரே மகள் மட்டும் உள்ளனர். நைனிகா தெறி, பாஸ்கர் ஒரு ராஸ்கள் ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தங்களுக்கு ஆண் வாரிசு இல்லாததால் நடிகை மீனாவே தனது கணவருக்கான இறுதிச்சடங்குகளை செய்துள்ளார்.

இந்த வயசுலேயேவா... மீளாத்துயரில் மீனா!

அடுத்த செய்தி

டிரெண்டிங்