ஆப்நகரம்

ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து நள்ளிரவில் தப்பியோடிய மீரா மிதுன்: படக்குழுவினர் அதிர்ச்சி!

'பேய காணோம்’ படப்பிடிப்பு தளத்தில் இருந்து நடிகை மீரா மிதுன் நள்ளிரவில் தனது உதவியாளர்கள் 6 பேருடன் சொல்லி கொள்ளாமல் சென்றுவிட்டதாக படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 14 Dec 2021, 6:32 pm
பிக் பாஸ் மூலம் கிடைத்த ஊடக வெளிச்சம் மூலமாக தன்னைத்தானே சூப்பர் மாடல் என கூறி கொள்பவர் மீரா மிதுன். சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து பல்வேறு சர்ச்சை கூறிய கருத்துகளை கூறி, அதன் மூலம் கிடைக்கும் பப்ளிசிட்டி மூலம் தன்னை பிரபலமாக காட்டி கொள்பவர் மீரா மிதுன். இவரைப்பற்றி இயக்குனர் ஒருவர் அளித்துள்ள புகார் பரபரப்பை கிளப்பியுள்ளது.
Samayam Tamil Meera Mitun
Meera Mitun


மாடலான மீரா மிதுன் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய ஊடக வெளிச்சத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தான். பட்டியலின மக்கள் குறித்து இழிவாக பேசி சிறை சென்ற மீரா மிதுன் அண்மையில்தான் சிறையில் இருந்து வெளியில் வந்தார்.

`மீரா மிதுன் குளோபல் எண்டர்டெயின்மெண்ட்' பட நிறுவனம் சார்பில் தயாராகி வந்த ‘பேய காணோம்’ என்ற படத்தில் பேயாக நடித்து வந்தார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி, செல்வ அன்பரசன் டைரக்டு செய்கிறார். இதன் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்றது. சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார் மீரா மிதுன். இந்நிலையில் படப்பிடிப்பில் ஒருநாள் மீரா சொல்லி கொள்ளாமல் சென்றுவிட்டதாக படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

19 வருடம் ஆச்சு... கொண்டாடும் திரிஷா: வாழ்த்தும் ரசிகர்கள்!
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, இந்த படத்தில் கதாநாயகியாக மீராமிதுன் நடித்திருக்கிறார். இவர் ஜெயிலில் இருந்து வந்தவுடன் முதலில் சென்னையில் படப்பிடிப்பை துவங்கினோம். அதன் பின் இறுதி கட்ட படப்பிடிப்பை கொடைக்கானலில் பின் திட்டமிட்டு அதற்காக படக்குழுவினர் அனைவரும் கொடைக்கானல் சென்று படப்பிடிப்பை நடத்தினோம். மேலும், படப்பிடிப்பு முழுவதும் முடிந்து இரண்டு நாட்கள் உள்ள நிலையில் திடீரென மீராமிதுன் நள்ளிரவில் 6 பேர் கொண்ட குழுவுடன் தனது உடமைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டார்.

மறுநாள் காலையில் தான் மேனேஜர் இந்த விஷயத்தை என்னிடம் சொன்னார். மொத்த படக்குழுவும் அதிர்ச்சி அடைந்து விட்டோம். பேயை தேட போய் கடைசியில் நாங்கள் எங்களது கதாநாயகியை தேட வேண்டிய சூழல் வந்துவிட்டது. பின் தயாரிப்பாளர் என்னிடம் தற்போது என்ன செய்யப் போகிறீர்கள்? என்று கேட்டார். இத்தனை தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பை மீராமிதுன் மதிக்காமல் சென்று விட்டார். அவர் இல்லை என்றாலும் பரவாயில்லை நான் காட்சிகளை வேறு விதமாக எடுத்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு படத்தை எடுத்தேன் என தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்