ஆப்நகரம்

ஹிப் ஹாப் ஆதியின் பாடல் யு டியூபில் இருந்து நீக்கம்..!

ஆதி இயக்கி நடித்து வரும் மீசைய முருக்கு திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலுக்கு எதிர்ப்பு வலுத்ததால் அந்த பாடல் யு டியூபில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

TNN 25 Nov 2016, 2:26 am
ஆதி இயக்கி நடித்து வரும் மீசைய முருக்கு திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலுக்கு எதிர்ப்பு வலுத்ததால் அந்த பாடல் யு டியூபில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil meesaya muruku saitji song removed from you tupe
ஹிப் ஹாப் ஆதியின் பாடல் யு டியூபில் இருந்து நீக்கம்..!


பாப் பாடகராக தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமான ஹிப் ஹாப் ஆதி,ஆம்பள,தனி ஒருவன் ஆகிய படங்களுக்கு சிறப்பாக இசையமைத்து நல்ல இசையமைப்பாளர் என்ற பெயரை பெற்றார்.இதனை தொடர்ந்து ”மீசையை முருக்கு” என்ற பெயரில் புதிய படம் ஒன்றை இயக்கி,அதில் ஹீரோவாகவும் ஆதி நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெறும் ’சேட்ஜி’ என்ற பாடல்கள்,படத்தின் விளம்பரத்திற்காக யு டியூப் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது.இந்த பாடலுக்கு ரசிகர்களும் நல்ல வரவேற்பை அளித்தனர்.இந்நிலையில் ”சேட்ஜி” பாடல் குறிப்பிட்ட சமுதாயத்தினரை புண்படுத்துவது போல் அமைந்துள்ளதாக கூறி,சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.மேலும் படத்தின் தயாரிப்பாளரான சுந்தர்.சிக்கு இது குறித்த நீதிமன்ற நோட்டீசும் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து இந்த பாடலானது யூ டியூப் வலைத்தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த பாடல் எந்த ஒரு சமூகத்தையும் புண்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்படவில்லை எனவும் முதலாளி என்ற பொருளை குறிக்கவே அந்த குறிப்பிட்ட வார்த்தை பயன்படுத்தப்பட்டதாகவும் ஹிப் ஹாப் ஆதி விளக்கமளித்துள்ளார்.



Meesaya Muruku saitji song removed from You tupe

அடுத்த செய்தி

டிரெண்டிங்