ஆப்நகரம்

விஜய் சேதுபதிக்கு ஜோடியான சிம்பு, தனுஷ் பட ஹீரோயின்

யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் மேகா ஆகாஷ் ஹீரோயினாக நடிக்கிறார்.

Samayam Tamil 6 Nov 2019, 9:59 am
கோலிவுட்டில் வருடத்திற்கு குறைந்தது 6 முதல் 8 படங்களில் விஜய் சேதுபதி நடிக்கிறார். 2018 ஆம் ஆண்டில் அதிக படங்களில் நடித்த ஹீரோ விஜய் சேதுபதி தான்.
Samayam Tamil விஜய் சேதுபதிக்கு ஜோடியான சிம்பு, தனுஷ் பட ஹீரோயின்
யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் மேகா ஆகாஷ் ஹீரோயினாக நடிக்கிறார்.


விஜய் சேதுபதி நடித்துள்ள சங்கத்தமிழன் வரும் 15ம் தேதி வெளியாகவுள்ளது. இது தவிர இவர் கைவசம் லாபம், க/பெ ரணசிங்கம் , மாமனிதன், ஏஏ20 , தளபதி 64 என வரிசையாக ஐந்து படங்கள் உள்ளன.

இந்த நிலையில் விஜய் சேதுபதியின் 33வது படமான யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இப்படத்தை லாபம் பட உதவி இயக்குநர் வெங்கட கிருஷ்ணா இயக்குகிறார்.

விக்ரம் 58 : தமிழில் ட்வீட் செய்து அசத்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்

சந்திரா ஆர்ட்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ஹீரோயினாக முதலில் அமலா பால் நடிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது அவருக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் மேகா ஆகாஷ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எகிப்தை தொடர்ந்து ஜோர்டானில் ரிலீஸாகும் பிகில்

விஜய் சேதுபதி இசை கலைஞராக நடிக்கிறார். முதல் கட்ட படப்பிடிப்பு பழனியில் நடைபெற்றது.

வந்தா ராஜாவாதான் வருவேன், பூமராங் படத்திற்கு பிறகு, பாலிவுட் சென்ற மேகா ஆகாஷ் மீண்டும் யாதும் ஊரே யாவரும் கேளிர் படம் மூலம் கோலிவுட் பக்கம் வருகிறார். இது தவிர இவர் அறிமுக நாயகியாக நடித்துள்ள எனை நோக்கி பாயும் தோட்டா படம் பல பிரச்னைகளை தாண்டி இம்மாத 29ம் வெளியாகவுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்