ஆப்நகரம்

தமிழுக்கு முன் தெலுங்கில் அறிமுகமான தனுஷ் பட நாயகி!

முதலில் தனுஷுடன் இணைந்த மேகா ஆகாஷ், அதற்கு முன் தெலுங்கு படம் ஒன்றில் அறிமுகமாகியுள்ளார்.

tnn 14 Aug 2017, 7:24 pm
முதலில் தனுஷுடன் இணைந்த மேகா ஆகாஷ், அதற்கு முன் தெலுங்கு படம் ஒன்றில் அறிமுகமாகியுள்ளார்.
Samayam Tamil megha akash will debut in telugu
தமிழுக்கு முன் தெலுங்கில் அறிமுகமான தனுஷ் பட நாயகி!


நடிகை மேகா ஆகாஷ், தமிழில் முதன் முதலாக நடிக்க ஆரம்பித்தார். இருந்தாலும் தற்போது தெலுங்கில் முதலில் அறிமுகமான நடிகை என்ற பெயரைப் பெற்றுள்ளார். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்‘ படத்தை இயக்கிய பாலாஜி தரணீதரன் இரண்டாவதாக இயக்க ஆரம்பித்த ‘ஒரு பக்கக் கதை’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் மேகா ஆகாஷ்.

இந்தப் படம் 2014ம் ஆண்டு செப்டம்பார் மாதம் ஆரம்பமானது. படப்பிடிப்பு முடிந்தும் சில பிரச்சனைகளால் இன்னும் படம் வெளிவராமலே உள்ளது. அந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்திலும் நடித்துவிட்டார் மேகா ஆகாஷ்.

இந்தப் படத்தின் வெளியீடும் தள்ளிக் கொண்டே போகிறது.நல்ல வேளை, இந்த இரண்டு தமிழ்ப் படங்களையும் நம்பாமல் தெலுங்கில் நிதின் ஜோடியாக ‘லை’ படத்தில் நடித்தார் மேகா ஆகாஷ். அந்தப் படம் கடந்த வெள்ளியன்று வெளியாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

தமிழில் அவர் நடித்த ‘ஒரு பக்கக் கதை’, ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ஆகிய இரண்டு படங்களும் எப்போது வெளியாகும் என்று தெரியவில்லை. இந்தப் படங்கள் வெளியானால் தமிழில் மேகா ஆகாஷுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும் என்றே தெரிகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்