ஆப்நகரம்

Mehreen Pirzada மாஜி முதல்வர் பேரனுடனான திருமணத்தை நிறுத்திய தனுஷ் பட ஹீரோயின்

நடிகை மெஹ்ரீன் பிர்சாதாவும், அவருக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையான பவ்யா பிஷ்னோயும் பிரிந்துவிட்டார்கள். இதை அவர்களே சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளனர்.

Samayam Tamil 4 Jul 2021, 8:21 am
தனக்கும், அரசியல்வாதியான பவ்யா பிஷ்னோய்க்கும் நிச்சயம் செய்யப்பட்ட திருமணத்தை நிறுத்துவதாக நடிகை மெஹ்ரீன் பிர்சாதா தெரிவித்துள்ளார்.
Samayam Tamil mehreen pirzada bhavya bishnoi break off engagement
Mehreen Pirzada மாஜி முதல்வர் பேரனுடனான திருமணத்தை நிறுத்திய தனுஷ் பட ஹீரோயின்


நிச்சயதார்த்தம்

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் மெஹ்ரீன் பிர்சாதாவுக்கும், ஹரியானா மாநில முன்னாள் முதல்வர் பஜன் லாலின் பேரனும், காங்கிரஸ் தலைவருமான பவ்யா பிஷ்னோய்க்கும் பெரியவர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவர்களின் நிச்சயதார்த்தம் மார்ச் மாதம் 12ம் தேதி ஜெய்பூரில் இருக்கும் அரண்மனையில் பிரமாண்டமாக நடைபெற்றது. நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு மெஹ்ரீன், பவ்யா மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து திருமணத்தை தள்ளி வைத்தனர்.

பிரிவு

தானும், பவ்யா பிஷ்னோயும் பிரிந்துவிட்டதாக மெஹ்ரீன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, திருமணத்தை நிறுத்துவது என்று பவ்யா பிஷ்னோயும், நானும் முடிவு செய்திருக்கிறோம். இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு இது. இனி எனக்கும், பவ்யா பிஷ்னோய்க்கும், அவரின் குடும்பத்தாருக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் தொடர்ந்து படங்களில் நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

பவ்யா பிஷ்னோய்

பவ்யா பிஷ்னோய் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, எங்களுக்கு இடையேயான கருத்து வேறுபாடு காரணமாக திருமணத்தை நிறுத்துவது என்று நானும், மெஹ்ரீனும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு முடிவு செய்தோம். நாங்கள் ஒருவருக்கொருவர் ஏற்றவராக இருப்போம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விதி வேறு மாதிரி இருக்கிறது. என்னை பற்றியும், என் குடும்பத்தாரை பற்றியும் வதந்திகள் பரப்புவோருக்கு நான் எந்த விளக்கமும் அளிக்க மாட்டேன் என்றார்.

நடவடிக்கை

என்னை பற்றியும், என் குடும்பத்தாரை பற்றியும் பரப்பப்படும் வதந்திகள் என் கவனத்திற்கு வந்தால் நான் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். நானும், என் குடும்பமும் கவுரவத்துடன் வாழ்கிறோம். பெண்களை மதிப்பவர்கள் நாங்கள். இந்நிலையில் அவதூறு பேசுவதன் மூலம் உங்களுக்கு சந்தோஷம் கிடைத்தால், தயவு செய்து உதவியை நாடவும் என பவ்யா பிஷ்னோய் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்