ஆப்நகரம்

தனுஷுக்கு டி.என்.ஏ சோதனை நடத்த நீதிமன்றத்தில் மனு..!

நடிகர் தனுஷுக்கு டி.என்.ஏ சோதனை நடத்த வேண்டுமென அவருக்கு உரிமை கோரி வரும் மதுரை தம்பதிகள் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர்.

TNN 2 Mar 2017, 9:56 am
நடிகர் தனுஷுக்கு டி.என்.ஏ சோதனை நடத்த வேண்டுமென அவருக்கு உரிமை கோரி வரும் மதுரை தம்பதிகள் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர்.
Samayam Tamil melur couple demand for a dna test for dhanush
தனுஷுக்கு டி.என்.ஏ சோதனை நடத்த நீதிமன்றத்தில் மனு..!



மதுரை மாவட்டம் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர்,நடிகர் தனுஷ் தன்னுடைய மகன் தான் எனவும் அவரிடம் இருந்து பராமரிப்புத் தொகை பெற்றுத்தர வேண்டும் எனவும் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கில் கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் தாக்கல் செய்துள்ள பள்ளி சான்றிதழ்களில் உள்ள அங்க அடையாளங்களை சரிபார்க்க,தனுஷ் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை சமீபத்தில் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து நேற்று முன் தினம் நீதிமன்றத்தில் தனுஷ் நேரில் ஆஜரானார்.இந்நிலையில் நடிகர் தனுஷுக்கு டி.என்.ஏ பரிசோதனை நடத்த வேண்டும் எனக் கோரி நேற்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மற்றொரு மனுவை கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் தாக்கல் செய்துள்ளனர் .இந்த மனுவானது நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் தனுஷின் அங்க அடையாளங்கள் சரிபார்க்கப்பட்டது குறித்த அறிக்கையும் நாளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

Melur Couple demand for a DNA test for Dhanush

அடுத்த செய்தி

டிரெண்டிங்