ஆப்நகரம்

அமெரிக்க வசூலில் ‘விவேகம்’ சாதனையை முறியடித்த ‘மெர்சல்’!

‘விவேகம்’ அமெரிக்க வசூலின் சாதனையை ‘மெர்சல்’ படம் முறியடித்துள்ளது.

TNN 21 Oct 2017, 3:50 pm
‘விவேகம்’ அமெரிக்க வசூலின் சாதனையை ‘மெர்சல்’ படம் முறியடித்துள்ளது.
Samayam Tamil mersal box office collection beat vivegam collection in america
அமெரிக்க வசூலில் ‘விவேகம்’ சாதனையை முறியடித்த ‘மெர்சல்’!


அமெரிக்காவில் ‘விவேகம்‘ படத்தின் மொத்த வசூலையும் ‘மெர்சல்’ படம் இரண்டே நாளில் வசூல் புரிந்து சாதனை படைத்துள்ளது. அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘மெர்சல்’. இந்தப் படத்திற்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து வெளியிட்டு இருக்கிறது.

தமிழகத்தில் ‘மெர்சல்’ படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும், அமெரிக்காவில் வசூல் சாதனை நிகழ்த்தியிருக்கிறது. ‘விவேகம்‘ படத்தின் மொத்த அமெரிக்க வசூலை, ‘மெர்சல்’ படத்தின் இரண்டு நாள் வசூல் கடந்துவிட்டது. அமெரிக்காவில் ’விவேகம்’ மொத்தமாக 5,22,091 டாலர்கள் வசூலித்திருந்தது. இதனை 2 நாட்களில் 5,40,745 டாலர்கள் வசூலித்து ‘மெர்சல்’ கடந்து சாதனை புரிந்திருக்கிறது.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் ‘மெர்சல்’ முதல் நாள் வசூலில் சாதனை புரிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்