ஆப்நகரம்

‘மெர்சல் வசூல் ‘கபாலி ‘விவேகம்’ வசூலை முந்தவில்லையாம்!

‘கபாலி’ ‘விவேகம்’ படங்களின் வசூலை ‘மெர்சல்’ படம் முந்தவில்லை என்று வியாபார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

TOI Contributor 21 Oct 2017, 1:49 pm
‘கபாலி’ ‘விவேகம்’ படங்களின் வசூலை ‘மெர்சல்’ படம் முந்தவில்லை என்று வியாபார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Samayam Tamil mersal box office didnt cross kabali and vivegam collection
‘மெர்சல் வசூல் ‘கபாலி ‘விவேகம்’ வசூலை முந்தவில்லையாம்!


ரஜினி நடித்த ‘கபாலி’ படத்தின் முதல் நாள் வசூல் ரூ.20 கோடி, நடிகர் அஜீத் நடித்த ‘விவேகம்‘ படத்தின் முதல் நாள் வசூல் ரூ.15 கோடியாக இருந்தது. இந்நிலையில் நடிகர் விஜய் நடித்த ‘மெர்சல்’ படத்தின் முதல் நாள் தமிழக வசூல் ரூ.23 கோடி என்ற தகவல் வெளியாகியுள்ளது. எனவே ‘கபாலி’, ‘விவேகம்’ படத்தின் முதல் நாள் வசூலை ‘மெர்சல்’ முந்தியதாக கருதப்பட்டாலும் அது உண்மையில்லையாம்.

‘கபாலி’, பட வெளியீட்டின்போது ஜிஎஸ்டி 28% மற்றும் உள்ளூர் வரி 8% என்பது இல்லை. ‘ஆனால் இந்த 36% ‘மெர்சல்’ வசூலில் இணைந்துள்ளதால் ரூ.23 கோடி என்று குறைந்துள்ளதாகவும், உண்மையில் இந்த 36%ஐ கழித்துவிட்டு பார்த்தால் ‘மெர்சல்’ திரைப்படத்தின் வசூல் 14.50 கோடி மட்டுமே என்றும் விநியோகிஸ்தர்கள் தரப்பினர் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி இந்த ரூ.14.50 கோடியில் திரையரங்க கட்டண உயர்வும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ‘விவேகம்‘ படத்தின்போது ஜிஎஸ்டி மட்டுமே இருந்தது என்பதால் 8% மற்றும் திரையரங்க கட்டண உயர்வையும் கழித்தால் உண்மையில் ‘மெர்சல்’ படத்தின் வசூல் ‘கபாலி’, ‘விவேகம்’ படத்தின் வசூலை முந்தவில்லை என்பதே உண்மை என வியாபார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்