ஆப்நகரம்

மீண்டும் ‘மெர்சல்’ திரையிடல்: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்!

புது படங்கள் எதுவும் வெளியாகாததால் மீண்டும் ‘மெர்சல்’ படத்தை தியேட்டர்களில் திரையிட முடிவு செய்துள்ளனர்.

Samayam Tamil 2 Mar 2018, 3:26 pm
புது படங்கள் எதுவும் வெளியாகாததால் மீண்டும் ‘மெர்சல்’ படத்தை தியேட்டர்களில் திரையிட முடிவு செய்துள்ளனர்.
Samayam Tamil mersal movie again rerelease vijay fans are happy
மீண்டும் ‘மெர்சல்’ திரையிடல்: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்!


மார்ச் 1ம் தேதி முதல் எந்த புதிய படமும் வெளிவராது என தமிழ் சினிமா உட்பட தென்னிந்திய சினிமா துறை முழுவதும் ஸ்டிரைக் நடத்தி வருகிறது. ஸ்டிரைக் முடியும் வரை இன்னும் சில வாரங்களுக்கு எந்தப் புதிய படமும் வெளிவராது என்பதால் சினிமா ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ள ஸ்டிரைக்கை சமாளிப்பதற்காக தற்போது தமிழ்நாடு மற்றும் பெங்களூருவில் உள்ள பல திரையரங்கங்கள் விஜய் நடித்த ‘மெர்சல்’ படத்தை மீண்டும் திரையிட முடிவு செய்துள்ளன. இந்தச் செய்தியைக் கேட்டு விஜய் ரசிகர்கள் அதிக சந்தோஷத்தில் இருக்கின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்