ஆப்நகரம்

மெர்சல் காட்டில் தொடரும் வசூல் மழை.!

மெர்சல் திரைப்படம் வெளியான நான்கு நாட்களில், சென்னையில் மட்டும் ரூ. 5.45 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

TNN 23 Oct 2017, 11:24 am
மெர்சல் திரைப்படம் வெளியான நான்கு நாட்களில், சென்னையில் மட்டும் ரூ. 5.45 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
Samayam Tamil mersal movie box office
மெர்சல் காட்டில் தொடரும் வசூல் மழை.!


தமிழக அரசியலை இப்போது பரபரப்பாக போய்க் கொண்டிக்கிறது மெர்சல் திரைப்படம். அதிலுள்ள ஆணித்தரமான வசனங்கள் தமிழக பாஜக-வை நிலைகுலையச் செய்துள்ளது. மோடியின் உண்மையான கோரமுகம் வெளியே தெரிந்துவிடக்கூடாது என்றே தமிழிசையும், எச். ராஜாவும் மெர்சலுக்கு தொடர்ந்து போர்க்கொடு தூக்கி வருகின்றனர்.

இவர்கள் என்னதான் எதிர்த்தாலும், பொதுமக்கள் தொடர்ந்து மெர்சல் திரைப்படத்திற்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். மெர்சல் காட்டில் வசூல் மழை விட்டபாடில்லை.

மெர்சல் திரைப்படம் வெளியான நான்கு நாட்களில், சென்னையில் ரூ.5.45 கோடி வரை வசூல் செய்துள்ளது. இதன் முதல் நாள் வசூல் மட்டும், ரூ.1.32 கோடி. மெர்சல் திரைப்படத்திற்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதால் மெர்சல் இன்னும் பல வசூல் சாதனைகளை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Mersal movie box office.

அடுத்த செய்தி

டிரெண்டிங்