ஆப்நகரம்

மெர்சல் படம் கர்நாடகாவிலும் சாதனை! - வெளிவந்தது வசூல் விபரம்

தளபதி விஜய் நடிப்பில் சில வாரங்களுக்கு முன் வெளிவந்த ‘மெர்சல்’ திரைப்படம் பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தாலும், அதை எல்லாம் தாண்டி பாக்ஸ் ஆபிஸ் வசூல் செய்ய தவறவில்லை.

TNN 19 Nov 2017, 6:13 pm
தளபதி விஜய் நடிப்பில் சில வாரங்களுக்கு முன் வெளிவந்த ‘மெர்சல்’ திரைப்படம் பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தாலும், அதை எல்லாம் தாண்டி பாக்ஸ் ஆபிஸ் வசூல் செய்ய தவறவில்லை.
Samayam Tamil mersal movie collections in karnataka
மெர்சல் படம் கர்நாடகாவிலும் சாதனை! - வெளிவந்தது வசூல் விபரம்


வசூல் ரீதியாக மட்டுமில்லாமல், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது மெர்சல் திரைப்படம். இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தினாலும், கர்நாடகாவில் பெரும்பாலான தியேட்டர்களில் குறிப்பிட்ட நாளில் வெளியிடப்படவில்லை.

இருப்பினும் அங்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் கர்நாடகாவில் வசூல் விபரம் தற்போது வெளியாகியுள்ளது. கர்நாடகாவில் தமிழ் பதிப்பு ரூ. 14.65 கோடி வசூல் செய்துள்ளது என்றும், தெலுங்கு பதிப்பு ரூ.27 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்யின் திரைப்பயணத்தில், கர்நாடகாவில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை மெர்சல் பெற்றுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்