ஆப்நகரம்

தெலுங்கிலும் சாதனை படைத்த மெர்சல் டீசர்..!

தமிழில் வெளியாகி உலக சாதனை படைத்த மெர்சல் படத்தின் டீசர், தற்போது தெலுங்கிலும் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

TNN 3 Oct 2017, 11:07 am
தமிழில் வெளியாகி உலக சாதனை படைத்த மெர்சல் படத்தின் டீசர், தற்போது தெலுங்கிலும் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
Samayam Tamil mersal movie teaser make a history on telugu cinema
தெலுங்கிலும் சாதனை படைத்த மெர்சல் டீசர்..!


தெறி பட வெற்றிக்குப் பிறகு விஜய், அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள மெர்சல் திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி உலக சாதனை படைத்தது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹமான் இசையமைத்துள்ள இந்த படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ளார்.

பொதுவாக கேரளா மற்றும் ஆந்திர மாநிலத்தில் விஜயின் படங்களுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில் சமீபத்தில் தெலுங்கில் வெளியான மெர்சல் திரைப்படத்தின் டீசர், தெலுங்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அடிரிந்தி’ என்னும் பெயரில் வெளியான மெர்சல் டீசர், வெளியான சில நிமிடங்களிலேயே 1 மில்லியன் பார்வையாளர்கள் மற்றும் 150K லைக்ஸ் பெற்றுள்ளது.

இப்படி பயங்கர எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், உலக சாதனை படைத்து வரும் மெர்சல் படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Mersal movie teaser make a history on telugu cinema.

அடுத்த செய்தி

டிரெண்டிங்