ஆப்நகரம்

விஷால் எடுத்த முடிவால் ‘மெர்சல்’ திட்டமிட்டபடி வெளியாகுமா?!

தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் விஷால் எடுத்த அதிரடி முடிவால் விஜய் நடித்த ‘மெர்சல்’ திட்டமிட்ட தேதியில் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

TNN 4 Oct 2017, 6:22 pm
தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் விஷால் எடுத்த அதிரடி முடிவால் விஜய் நடித்த ‘மெர்சல்’ திட்டமிட்ட தேதியில் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
Samayam Tamil mersal movie will release on expected date
விஷால் எடுத்த முடிவால் ‘மெர்சல்’ திட்டமிட்டபடி வெளியாகுமா?!


அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த ‘மெர்சல்’ வரும் தீபாவளி தினமான அக்டோபர் 18ம் தேதி வெளியாகவுள்ளது. தற்போது இந்த படத்தின் ரிலீசுக்கு தேவையான அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு விட்டது. இன்னும் ஓரிரு நாட்களில் படத்தை சென்சாருக்கு அனுப்பவுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று தயாரிப்பாளர் சங்க கூட்டம் தலைவர் விஷால் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வரும் வெள்ளி முதல் அதாவது அக்டோபர் 6 முதல் எந்த புதிய திரைப்படங்களும் வெளியிடப்படமாட்டாது என்று தலைவர் விஷால் அதிரடியாக அறிவித்துள்ளார்.

ஏற்கனவே ஜிஎஸ்டி வரியால் பாதிக்கப்பட்டுளள நிலையில் தற்போது தமிழக அரசு மேலும் 10% கேளிக்கை வரிகள் தமிழ்ப்படங்களுக்கும், 20% பிறமொழி படங்களுக்கும் விதித்துள்ளதை எதிர்த்தே இந்த நடவடிக்கை என்று கூறப்பட்டுள்ளது. இதனால் ‘மெர்சல்’ திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது

அடுத்த செய்தி

டிரெண்டிங்