ஆப்நகரம்

தெலுங்கில் அதிக விலைக்கு விற்பனையாகும் மெர்சல்!

விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மெர்சல். இப்படத்தின் தெலுங்கு உரிமையை அதிக விலைக்கு விற்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

TNN 24 Sep 2017, 8:52 am
சென்னை: விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மெர்சல். இப்படத்தின் தெலுங்கு உரிமையை அதிக விலைக்கு விற்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Samayam Tamil mersal team has planned to sell the telugu rights for a very high budjet
தெலுங்கில் அதிக விலைக்கு விற்பனையாகும் மெர்சல்!


ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மெர்சல் படம் வரும் தீபாவளி தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையை 8 கோடிக்கு விற்க மெர்சல் படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, படத்தை தெலுங்கில் விளம்பரப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விஜய்யின் படங்களில் அதிக விலைக்கு தெலுங்கில் விற்கப்படும் படம் இதுவாகும். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய்யுடன் வடிவேல், காஜல் அகர்வால், சமந்தா, சத்யராஜ், சத்யன், யோகி பாபு உள்ளிட்டோர் உடன் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Mersal team has planned to sell the Telugu rights for a very high budjet.

அடுத்த செய்தி

டிரெண்டிங்