ஆப்நகரம்

தெலுங்கில் 400க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியான ‘மெர்சல்’’

விஜய் நடித்த ‘மெர்சல்’ படம், தெலுங்கில் ‘அதிரிந்தி’ என்ற பெயரில் 400க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகியுள்ளது.

TNN 13 Nov 2017, 2:01 pm
விஜய் நடித்த ‘மெர்சல்’ படம், தெலுங்கில் ‘அதிரிந்தி’ என்ற பெயரில் 400க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகியுள்ளது.
Samayam Tamil mersal telugu version adhirindhi released in 400 theaters
தெலுங்கில் 400க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியான ‘மெர்சல்’’


விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்துக்கு தெலுங்கிலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழில் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியானது. இந்தப் படத்தின் தெலுங்குப் பதிப்பான ‘அதிரிந்தி’, சென்சார் பிரச்னையால் திட்டமிட்ட தேதியில் தெலுங்கில் வெளியாக முடியவில்லை. ஒருவழியாக இந்த வாரம் ரிலீஸாகியிருக்கிறது. இதுவரைக்கும் விஜய் படங்களுக்கு இல்லாத வகையில், 400க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ‘அதிரிந்தி’ வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இதற்கு முன் வெளியான ‘தெறி’ படத்தின் தெலுங்குப் பதிப்பான ‘பொலிச்சோடு’ அவ்வளவாக ஓடவில்லை. ஆனால், ‘அதிரிந்தி’க்கு தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

படத்தில் மத்திய அரசை விமர்சிக்கும் ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா வசனங்கள் மியூட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்