ஆப்நகரம்

‘எமனை’ நம்பியிருக்கும் ‘அமரகாவியம்’ நாயகி!

‘அமரகாவியம்’ பட நாயகியான மியா ஜார்ஜ், தற்போது ‘எமன்’ படத்தை பெரிதாக நம்பியிருக்கிறார்.

TOI Contributor 30 Dec 2016, 4:20 pm
‘அமரகாவியம்’ பட நாயகியான மியா ஜார்ஜ், தற்போது ‘எமன்’ படத்தை பெரிதாக நம்பியிருக்கிறார்.
Samayam Tamil mia george is believing eman film
‘எமனை’ நம்பியிருக்கும் ‘அமரகாவியம்’ நாயகி!


மலையாளத்திலிருந்து தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை மியா ஜார்ஜ். இவர் மலையாளத்தில் பல படங்களில் நடிததுவிட்டுதான் ‘அமர காவியம்’ படம் தமிழில் மூலம் அறிமுகமானார். இவரை தமிழுக்கு கொண்டு வந்தார் டைரக்டர் ஜீவா சங்கர். படத்தின் அவரின் நடிப்பு நன்றாக இருந்தது. இருந்தாலும் படம் வெற்றிபெறவில்லை. மேலும் அவர் நடித்த ‘இன்று நேற்று நாளை’, ‘வெற்றிவேல்’, ‘ஒருநாள்கூத்து’ போன்ற படங்களும் அவருக்கு கைகொடுக்கவில்லை.

இந்த நிலையில், தற்போது விஜய் ஆண்டனியுடன் நடித்துள்ள ‘எமன்’ படத்தை பெரிதாக நம்பியிருக்கிறார். இந்தப் படம் தமிழ் திரையுலகில் தனக்கு திருப்புமுனையாக அமையும் என்கிறார். அவரை அறிமுகப்படுத்திய ஜீவா சங்கர் இயக்கும் படம்தான் ‘எமன்’. இந்த படம் அவருக்கு கண்டிப்பாக பெயர் சொல்லும் படமாக அமையும். படத்தில் மியா ஜார்ஜுக்கு மனதை தொடும் அழுத்தமான வேடத்தை படத்தில் கொடுத்திருக்கிறார் டைரக்டர். இதற்கு முன்பு நான் நடித்த படங்கள் என்னை ஏமாற்றினாலும், ‘எமன்’ படம் என்னை ஒருபோதும் ஏமாற்றாது என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்