ஆப்நகரம்

மைக்கேல் ஜாக்சன் மகள் தற்கொலை முயற்சி?

பிரபல பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன் மகள் பாரிஸ் ஜாக்சன் கை நரம்பை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாக ஒரு வதந்ததி பரவியுள்ளது.

Samayam Tamil 19 Mar 2019, 1:24 pm
பிரபல பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன் மகள் பாரிஸ் ஜாக்சன் கை நரம்பை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாக ஒரு வதந்ததி பரவியுள்ளது.
Samayam Tamil jack


ஹாலிவுட் உலகில் முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர் மைக்கேல் ஜாக்சன். இசையுடன் கூடிய தனது நடனத்தால் இவர் மறைந்தும் பல உள்ளங்களில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரின் மகள் பாரிஸ் ஜாக்சன். இவர் தற்போது ‘லீவிங் நெவர்லேண்ட் என்ற ஆவண படத்தில் நடித்துள்ளார். இதில் மைக்கேல் ஜாக்சன் சிறுவயது குழந்தைகளை தவறாக பயன்படுத்தியாக காட்டியுள்ளார்கள்.

இப்படம் வெளியாகி பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக பாரிஸ் கூறியிருந்தார். இந்நிலையில் அவர் கை மணிக்கட்டு நரம்பை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகவும், மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருப்பதாகவும் ஒரு செய்தி பரவியது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பாரிஸ் ஜாக்சன் இது முற்றிலிருந்து வதந்தி.இப்படியாக வதந்தியை பரப்பியவர்களை கெட்டவார்த்தையால் திட்டி தீர்த்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்