ஆப்நகரம்

திடீரென்று மாற்றப்பட்ட 'மிக மிக அவசரம்' ரிலீஸ் தேதி! காரணம் இது தானாம்...

மிக மிக அவசரம் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக சுரேஷ் காமாட்சி அறிவித்துளளார்.

Samayam Tamil 10 Oct 2019, 1:29 pm
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள படம் ‘மிக மிக அவசரம்’.இதில் ஸ்ரீ பிரியங்கா பெண் காவலராக நடிக்க அரீஷ் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
Samayam Tamil migamiga avasaram

மேலும் இவர்களுடன் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்னும் நடித்துள்ளார்.

இந்த படத்தின் கதையை புதிய கீதை, கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை ஆகிய படங்களின் இயக்குநர் ஜெகன்நாத் எழுதியுள்ளார். ஒரு பெண் போலீஸ் அனுபவிக்கும் இக்கட்டான பிரச்சனைகளையும், வலியையும் அறிந்து அவர்களுக்கும் மனிதாபிமானம், மக்கள் போராட்டம் ஆகியவற்றில் அக்கறை இருப்பது என்பதை அற்புதமாக சுரேஷ் காமாட்சி காட்டியுள்ளதாக படத்தை பார்த்த பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

என்னது சிம்பு மீது புகார் கொடுத்தேனா? ஞானவேல்ராஜா விளக்கம்!

இந்த நிலையில் இப்படம் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.

சயீரா நரசிம்ம ரெட்டி படத்தை பாராட்டிய தமிழிசை சவுந்தரராஜன்

இது குறித்து அவர் தனது ட்வீட்டில், '11 ஆம் தேதி வெளியாக இருந்த மிகமிக அவசரம் படம் திரையரங்குகள் கிடைக்காத காரணத்தால் வெளியீடு அடுத்த வாரத்திற்குத் தள்ளி வைக்கப்படுகிறது. அக்டோபர் 18 இல் வெளியாகும்.பாராட்டில் குளிர்வித்துக் கொண்டிருக்கும் பத்திரிகையாளர்களுக்கு நன்றி. உங்கள் ஆதரவைத் தொடர்ந்து தரக் கேட்டுக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘நம்ம வீட்டு பிள்ளை’ மற்றும் தனுஷின் ‘அசுரன்’ போன்ற படங்கள் திரையரங்குகளிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக் கொண்டு இருக்கிறது.

மேலும் நாளை ‘அருவம்’, ‘பெட்ரோமாக்ஸ்’ மற்றும் ‘பப்பி’ என்று மூன்று படங்கள் வெளியாக உள்ளதால் ‘மிக மிக அவசரம்’ படத்திற்கு எதிர்பார்த்த திரையரங்குகள் கிடைக்கவில்லை. அதனால் தான் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்