ஆப்நகரம்

அரசியல் எதிரி கமலுக்கு, பொன்னாடை போர்த்தி வரவேற்ற அமைச்சர் ஜெயக்குமார்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டப திறப்பு விழாவில் கமலை, அமைச்சர் ஜெயக்குமார் வரவேற்றார்.

TNN 1 Oct 2017, 11:22 am
சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டப திறப்பு விழாவில் கமலை, அமைச்சர் ஜெயக்குமார் வரவேற்றார்.
Samayam Tamil minister jayakumar welcomes actor kamal hassan
அரசியல் எதிரி கமலுக்கு, பொன்னாடை போர்த்தி வரவேற்ற அமைச்சர் ஜெயக்குமார்!


நடிகர் கமல் ஹாசன் தனது அரசியல் பிரவேசம் குறித்து வெளிப்படையாகவே கருத்து தெரிவித்து வருகிறார். விரைவில் புதுக்கட்சி தொடங்கப் போவதாகவும், ஆட்சி மாற்றம் வேண்டும் என்றும் கமல் ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் ஆளுங்கட்சி மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். இதற்கு ஆட்சியாளர்கள் மத்தியில் இருந்து கடும் விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனால், ஒரு எம்.எல்.ஏ கூட ஆக முடியவில்லை என்றும், அவருடைய அரசியல் வாழ்வு மிகவும் சுருங்கியது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.

அதனை கமல் நினைவு கூர்ந்து, அரசியல் பிரவேசத்தை முடிவு செய்து கொள்ளலாம் என்று குறிப்பிட்டார். இந்நிலையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மணி மண்டப திறப்பு விழா, சென்னையில் இன்று நடைபெற்றது.

அதில் அரசு சார்பில் துணை முதலமைச்சர் ஓபிஎஸ், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த சூழலில் ரஜினிக்கு ஓபிஎஸ்சும், கமலுக்கு அமைச்சர் ஜெயக்குமாரும் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

இந்த சம்பவம் மேடையில் சுவாரஸ்யம் நிகழ்வாக அனைவராலும் பார்க்கப்பட்டது.

Minister Jayakumar welcomes actor Kamal Hassan.

அடுத்த செய்தி

டிரெண்டிங்