ஆப்நகரம்

Bigil Track List: தலைவன் ரசிகனுக்கு அடிச்சா அதுக்கு பேரு பிகில்: தளபதிக்காக மிர்ச்சி சிவா கவிதை!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியை நடிகர் மிர்ச்சி சிவா மற்றும் விஜே ரம்யா ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர்.

Samayam Tamil 19 Sep 2019, 8:06 pm
தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் பிகில் படத்தில் நடித்துள்ளார். வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படம் திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது தாம்பரம் பகுதியிலுள்ள ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடந்து வருகிறது. இதில், படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். தளபதி விஜய்யின் 64ஆவது படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜும் இந்த விழாவில் கலந்து கொண்டார்.
Samayam Tamil Thalapathy Vijay Bigil Audio


இந்த விழாவை, மிர்ச்சி சிவா மற்றும் விஜே ரம்யா ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர். இருவரது உரையாடலின் போது, இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தேவையில்லை. விஜய் எழுந்தாலெ கை காட்டினாலே கை தட்டுறாங்க என்ற சிவா, தனது கவிதை திறனை தற்போது வெளிக்காட்டியுள்ளார். இதற்கு விஜய்யை மூலக்காரணமாக பயன்படுத்திக் கொண்டார்.

Bigil Audio Launch: பிகில் இசை வெளியீட்டு விழாவில் பரிசு: இன்ப அதிர்ச்சியில் தளபதி ரசிகர்கள்!

இந்த மாதிரி ரசிகர்கள் இருக்கும் வரை தளபதி’ய யாராலும் ஒண்ணும் பண்ண முடியாது!

தளபதி விஜய்யின் பிகில் இசை வெளியீட்டு விழா மேடை இதுதானாம்!

ஒரு ரசிகன் ஒரு தலைவனுக்காக அடிச்சா அது விசிலு, அதே ஒரு தலைவன் ரசிகனுக்காக அடிச்சா அது பிகிலு என்றார். மேலும், எப்படியெல்லாம் ஃபுட்பால் விளையாடனும் என்று தளபதி பிகில் சொல்லி கொடுத்திருக்காரு. எப்படியெல்லாம் கிரிக்கெட் விளையாடக்கூடாதுன்னு நாங்க சொல்லிக் கொடுத்தோம் என்று கூறி அரங்கத்தை சிரிப்பலையில் அதிரவைத்துள்ளார்.

நேற்று இப்படத்திலுள்ள உனக்காக என்ற ரொமாண்டிக் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதற்கு முன்னதாக சிங்கப்பெண்ணே மற்றும் வெறித்தனம் ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே மாஸான ஒரு வரவேற்பைப் பெற்றன. பிகில் படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து நயன்தாரா, கதிர், இந்துஜா, ஜாக்கி ஷெராஃப், விவேக், டேனியல் பாலாஜி, யோகி பாபு ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.


பெண்களின் கால்பந்து விளையாட்டை மையப்படுத்திய இப்படத்தில் விஜய், அப்பா, மகன் என்று இரு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவைத் தொடர்ந்து இப்படத்தின் டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அடுத்த செய்தி

டிரெண்டிங்