ஆப்நகரம்

Aishwarya Rai: “குலு மாமி” யாருன்னு தெரிஞ்சா அசந்துருவீங்க..!

உலக அழகியான பிரபல நடிகை ஐஸ்வர்யா ராயை அவரது வீட்டில் ‘குலு மாமி’ என்று செல்லமாக அழைப்பார்களாம்.

Samayam Tamil 26 Nov 2018, 4:13 pm
ஐஸ்வர்யா ராய் 1994ம் ஆண்டு உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் தமிழ் சினிமாவில் ‘இருவர்’ படத்தின் மூலம் அறிமுகமானார். இவரை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் மணிரத்னம். இவர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த பிறகு இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, வங்காளம் மற்றும் ஆங்கிலப் படங்களில் நடித்துள்ளார்.
Samayam Tamil aishwarya-rai


பின்னர் 2007ல் ஆண்டு ஐஸ்வர்யா ராய்க்கும், பிரபல நடிகர் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனுக்கும் திருமணம் நடைபெற்றது. ஐஸ்வர்யாவுக்கு தற்போது ஒரு மகள் இருக்கிறார். திருமணத்துக்குப் பின்னரும் ஐஸ்வர்யா பல படங்களில் நடித்து வருகிறார். கணவர் அபிஷேக் பச்சனும் ஒரு நடிகர். இருவரும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் ஐஸ்வர்யா ராய்க்கு வீட்டில் ஒரு பட்டப்பெயர் இருந்தாம். அவரை வீட்டில் ‘குலு மாமி’ என்று தான் அழைப்பார்களாம். இதை ஐஸ்வர்யா ராயின் சகோதரரின் மனைவி இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்