ஆப்நகரம்

வர்மாவில் விக்ரம் மகனுக்கு ஜோடி பெங்கால் நடிகை

விக்ரம் மகன் த்ருவ் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக பெங்கால் நடிகை மேகனா நடிக்க உள்ளார்.

Samayam Tamil 4 Jul 2018, 7:47 pm
சென்னை: விக்ரம் மகன் த்ருவ் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக பெங்கால் நடிகை மேகனா நடிக்க உள்ளார்.
Samayam Tamil 64851284


தெலுங்கில் சூப்பர் ஹிட்டான திரைப்படம் அர்ஜுன் ரெட்டி. இப்படத்தை தமிழில் வர்மா என்ற பெயரில் இயக்குநர் பாலா ரீமேக் செய்கிறார். இந்த படம் மூலம் சீயான் விக்ரமின் மகன் த்ருவ் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

இதற்கான படப்பிடிப்பு தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், த்ருவ் ஜோடியாக ஸ்ரேயா சர்மா இணைய உள்ளார் என்று கூறப்பபட்டது. ஆனால் திடீரென அவர் இப்படத்தில் நடிக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

பெங்கால் நடிகை மேகனா இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார் என்றும் அவர்தான் த்ருவ் ஜோடியாக நடிக்கப்போகிறார் என்றும் தெரிகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்