ஆப்நகரம்

அடுத்த த்ரில்லருக்கு ரெடியாகும் த்ரிஷ்யம் கூட்டணி: மீண்டும் இணையும் மோகன்லால் - ஜீத்து ஜோசப்!

த்ரிஷ்யம் 2 வெற்றிக்கு பிறகு மூன்றாவது முறையாக ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கவுள்ள புதிய திரைப்படத்திற்கு '12த் மேன்' என தலைப்பிடப்பட்டுள்ளது.

Samayam Tamil 5 Jul 2021, 5:54 pm
மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமான கூட்டணி என்று மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணியை சொல்லலாம். இவர்கள் இருவரும் இணைந்த 'த்ரிஷ்யம்' மற்றும் அதன் இரண்டாம் பாகம் ஆகிய இரண்டு படங்களுக்குமே தென்னிந்தியா அளவில் ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர்கள் இருவரும் மூன்றாவது முறையாக இணையவுள்ள திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Samayam Tamil Mohanlal_Jeethu Joseph
Mohanlal_Jeethu Joseph


ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்த 'த்ரிஷ்யம்' திரைப்படம் இந்திய அளவில் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டு வசூல் சாதனை புரிந்தது. அதுமட்டுமல்லாமல் சீனா மொழியிலும் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் அமேசான் ப்ரைம் தளத்தில் இவர்கள் கூட்டணியில் உருவான த்ரிஷ்யம் இரண்டாம் பாகமும் மாபெரும் வெற்றியடைந்தது. இந்நிலையில் மூன்றாவது முறையாக இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்து பணிபுரியவுள்ளது. இந்தப் படத்துக்கு '12த் மேன்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதனை ஆண்டனி பெரம்பாவூர் தயாரிக்கவுள்ளார். த்ரிஷ்யம் படம் பாணியில் இந்த படமும் த்ரில்லர் கதைகளத்தில் உருவாகவுள்ளது.

விடிவுகாலம் பிறந்தாச்சு: சென்னையில் ஷங்கரை சந்தித்த ராம்சரண் - தயாரிப்பாளர் தில் ராஜு!
இந்த படத்தில் அனுஸ்ரீ, அதிதி ரவி, லியோனா, வீணா நந்தகுமார், சைன் டாம் சாக்கோ, சைஜு குரூப், பிரியங்கா நாயர், ஷிவதா, சந்துநாத், சாந்தி உள்ளிட்ட பலர் மோகன்லாலுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடிக்கப் படக்குழு முடிவு செய்துள்ளது.

முன்னதாக த்ரிஷ்யம் திரைப்படத்தை முடித்தவுடன் மோகன்லால், திரிஷா நடிப்பில் 'ராம்' திரைப்படத்தை இயக்க இருந்தார் ஜீத்து ஜோசப். ஆனால் இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட இருந்ததால், கொரோனா அச்சுறுத்தல், ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் இந்தப் படம் தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்