ஆப்நகரம்

வீடியோ: புலி முகத்தோடு அடுத்த படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால்

மலையாள ஸ்டார் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் படம் புலிமுருகன்.

TNN 7 Mar 2017, 1:05 pm
மலையாள ஸ்டார் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் படம் புலிமுருகன். இப்படம் தற்போது 150 நாட்களை தாண்டி வெற்றிகரமாக ஓடியதையடுத்து புலிமுருகன் படக்குழு வெற்றியை கொண்டாடியுள்ளது.
Samayam Tamil mohanlal announce his next movie in a different manner
வீடியோ: புலி முகத்தோடு அடுத்த படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால்




இந்த வெற்றி விழாவில் மோகன்லால் உள்பட படக்குழுவினர், அனைவரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர். அப்போது பேசிய மோகன்லால் கூறுகையில், புலிமுருகன் படத்தின் வெற்றிக்கு துணைநின்ற அனைவருக்கும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். அதன் பின் மேஜர் ரவி இயக்கத்தில் 4வது முறையாக இணைந்து தான் நடித்து வரும் 1971 – பியாண்ட் தி பார்டர்ஸ் படத்தின் வெளியீட்டு தேதியையும் வித்தியாசமான முறையில் வீடியோ வடிவில் அறிவித்துள்ளார்.



இந்த அதிரடி அறிவிப்பை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மூன்று வீடியோக்களை பதிவேற்றியுள்ளார். அதில் முதல் இரண்டு வீடியோக்களில் புலி முகத்துடன் இருப்பது போலவும், இறுதியாக வெளியிட்ட வீடியோவில் திடீரென புலி முகம் மாறி உண்மையான முகத்துடன் இவ்வறிவிப்பை வெளியிடுவது போலவும் பதிவிட்டுள்ளார்.



இந்த அறிவிப்பில் தான் நடிக்கும் 1971 – பியாண்ட் தி பார்டர்ஸ் படம் வரும் சித்திரை மாதம் விஷூ கொண்டாட்ட தினமான ஏப்ரல் 9ம் தேதி வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohanlal announce his next movie in a different manner.

அடுத்த செய்தி

டிரெண்டிங்