ஆப்நகரம்

Mohanlal: சூர்யாவின் காப்பான் படப்பிடிப்பை முடித்த மோகன்லால்!

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் காப்பான் படத்தின் படப்பிடிப்பை நடிகர் மோகன் லால் முடித்துள்ளார்.

Samayam Tamil 21 Feb 2019, 3:23 pm
சூர்யா நடிப்பில் உருவாகி வரும் காப்பான் படத்தின் படப்பிடிப்பை நடிகர் மோகன் லால் முடித்துள்ளார்.
Samayam Tamil Kappan


இயக்குனர் கேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் காப்பான். இப்படத்தின் சூர்யாவுடன் இணைந்து மோகன்லால், ஆர்யா, சாயிஷா, பொமன் இரானி, சமுத்திரக்கனி, ப்ரேம், த்ரிஷா ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். லைகா புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹரீஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

சென்னை, கேரளா என்று பல பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. த்ரில்லர் கதையை மையப்படுத்திய இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில், நடிகர் மோகன் லால் இப்படத்தில் தனது படக்காட்சிகளை நடித்து முடித்துள்ளார். விரைவில் இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்