ஆப்நகரம்

ஸ்டிரைக் வாபஸ்: டிக்கெட் ரூ.120 தான், ஆனால், ஜிஎஸ்டி சேர்த்து ரூ.153 ஆக உயர்வு!

அமைச்சர்களுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் தியேட்டர் ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

TNN 6 Jul 2017, 5:32 pm
அமைச்சர்களுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் தியேட்டர் ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
Samayam Tamil movie ticket rate hike from tomorrow after gsts 28 percentage says abirami ramanathan
ஸ்டிரைக் வாபஸ்: டிக்கெட் ரூ.120 தான், ஆனால், ஜிஎஸ்டி சேர்த்து ரூ.153 ஆக உயர்வு!


தமிழகத்தில் விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி மற்றும் கேளிக்கை வரி என இரட்டை வரி முறையை எதிர்த்து திரையரங்க உரிமையாளர்கள் கடந்த 3ம் தேதி முதல் திரையரங்குகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து இன்று 4வது நாளாக போராட்டம் தொடர்ந்தது. இந்நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் வேலுமணி, வீரமணி, கடம்பூர் ராஜூ ஆகியோருடன் திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் திரைத்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் கூறுகையில், தமிழகத்தில் விதிக்கப்பட்ட இரட்டை வரிவிதிப்பை எதிர்த்து தொடர்ந்து 4 நாட்களாக கிட்டத்தட்ட 1000க்கும் அதிகமான திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன. இதன் விளைவாக நாள் ஒன்றுக்கு ரூ.20 கோடி வீதம் நஷ்டம் ஏற்பட்டது. அமைச்சர்களிடம் எங்களின் கஷ்டங்களைப் பற்றி எடுத்துரைத்தோம். அவர்கள் புரிந்து கொண்டனர். அதன் அடிப்படையில், இந்த பிரச்சனை இன்று ஒரு முடிவிற்கு வந்துள்ளது.

ஆனால், கேளிக்கை வரி குறித்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்த அரசு சார்பில் 6 பேர் கொண்ட குழுவும், சினிமா துறை சார்பில் 8 பேர் கொண்ட குழுவும் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுக்களின் பேச்சுவார்த்தை எங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நம்புகிறோம். இந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டதையடுத்து நாளை முதல் திரையரங்குகள் வழக்கம் போல் செயல்படும். ஆனால், டிக்கெட் விலை என்னவோ ரூ.120 தான், அதனுடன் ஜிஎஸ்டி வரி 28 சதவீதம் சேர்த்து ரூ.153.60 காசாக இருக்கும் என்று அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்