ஆப்நகரம்

மிஸ்டர் சந்திரமௌலி படம் ஜூலை 6ம் தேதி ரிலீஸ்!

கார்த்திக் மற்றும் கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் ‘மிஸ்டர் சந்திரமௌலி’ படம் ஜூலை 6ம் தேதி வெளியாகவுள்ளது.

Samayam Tamil 30 May 2018, 4:15 pm
கார்த்திக் மற்றும் கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் ‘மிஸ்டர் சந்திரமௌலி’ படம் ஜூலை 6ம் தேதி வெளியாகவுள்ளது.
Samayam Tamil mr chandramouli


நடிகர் கார்த்திக் மற்றும் அவரது மகன் கௌதம் கார்த்திக் ஆகியோர் இணைந்து முதன் முறையாக நடித்துள்ள படம் ‘மிஸ்டர் சந்திரமௌலி’. இந்தப் படத்தை திரு இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் அப்பா & மகனாகவே நடித்திருக்கின்றனர். நடிகை ரெஜினா ஹீரோயினியாக நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். படத்தை தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் இசை சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படம் வரும் ஜூலை 6ம் தேதி ரிலீஸாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்