ஆப்நகரம்

பிக்பாஸ் குடும்பத்தில் இருந்து வெளியேறும் “மீனாகுமாரி” நடிகை

போதைப் பொருள் பயன்பாடு குறித்த விசாரணைக்காக பிக்பாஸ் குடும்பத்தில் இருந்து நடிகை மும்பைத் கான் வெளியேறவுள்ளார்.

TNN 23 Jul 2017, 9:46 am
போதைப் பொருள் பயன்பாடு குறித்த விசாரணைக்காக பிக்பாஸ் குடும்பத்தில் இருந்து நடிகை மும்பைத் கான் வெளியேறவுள்ளார்.
Samayam Tamil mumaith khan to exit bigg boss for questioning in drug case
பிக்பாஸ் குடும்பத்தில் இருந்து வெளியேறும் “மீனாகுமாரி” நடிகை


போதைப் பொருள் பயன்பாடு மற்றும் போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு குறித்து விசாரனைக்குள் தெலுங்கு திரையுலகம் சிக்கியுள்ளது.

போதைப் பொருள் தொடர்பாக நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் என பலரிடம் கலால் துறையின் விசாரணைக் குழு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதில் சிக்கியுள்ள நடிகை முமைத் கான் வரும் 27ம் தேதி விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு கலால் துறையின் விசாரணைக் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக மும்பை லொனவாலாவில் உள்ள பிக்பாஸ் வீட்டில் தங்கியுள்ள நடிகை முமைத் கான் போதைப் பொருள் தொடர்பான விசாரனைக்கு ஆஜர் ஆகுவதற்கு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறவுள்ளதாக அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக மும்பை லொனவாலாவில் (lonavala) உள்ள பிக் பாஸ் பங்களாவில் முமைத் கான் தங்கி உள்ளார். விசாரணைக்கு ஆஜர் ஆகுவதற்காக பங்களாவில் இருந்து வெளியேறவுள்ளதாக அதிகாரிகள் தரப்பிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்