ஆப்நகரம்

‘முண்டாசு பட்டி’ ராம்குமார் இயக்கத்தில் புதிய படத்தில் தனுஷ்!

நடிகர் தனுஷ், ‘முண்டாசு பட்டி’ படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

Samayam Tamil 27 Sep 2018, 1:39 pm
கலைப்புலி எஸ்.தாணு, நடிகர் தனுஷ் கூட்டணியில் உருவான வெற்றிப் படம் ‘வேலையில்லா பட்டதாரி’. மேலும் தனுஷை வைத்து மூன்று படங்களை தயாரிக்க முடிவு செய்திருந்தார். அதில் ஒரு படத்தை பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கவுள்ளார். மற்றொரு படத்தை ‘முண்டாசுப் பட்டி’ இயக்குனர் ராம்குமார் இயக்கவுள்ளார். இந்தப் படங்களின் படப்பிடிப்பு அடுத்த வருடம் மார்ச் மாதம் தொடங்கவுள்ளது.
Samayam Tamil Dhanush.


தற்போது விஷால், அமலா பால் நடித்துள்ள ‘ராட்சன்’ படத்தை ‘முண்டாசு பட்டி’ ராம்குமார் இயக்கி வருகிறார். இந்தப் படம் அடுத்த மாத் 5ம் தேதி வெளியாகவுள்ளது.

தற்போது நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘வட சென்னை’ இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அந்த படம் வெளியான பிறகு, அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்