ஆப்நகரம்

விஷ்ணு விஷால் இயக்குனருடன் இணையும் நடிகர் தனுஷ்!

நடிகர் தனுஷ் அடுத்ததாக விஷ்ணு விஷாலை வைத்து ‘முண்டாசுப்பட்டி’ படத்தை இயக்கிய இயக்குனருடன் இணையவுள்ளார்.

Samayam Tamil 18 Aug 2018, 4:34 pm
நடிகர் தனுஷ் அடுத்ததாக விஷ்ணு விஷாலை வைத்து ‘முண்டாசுப்பட்டி’ படத்தை இயக்கிய இயக்குனருடன் இணையவுள்ளார்.
Samayam Tamil dhanush


நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘வேலையில்லா பட்டதாரி 2’. இந்தப் படத்தை அடுத்து எந்தப் படம் வெளியாகவில்லை. ஆனால், பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் தனுஷ். வெற்றி மாறன் இயக்கத்தில் ‘வடசென்னை’ படத்திலும், மேலும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, ‘மாரி 2’ ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவை எல்லாமே முடியும் தருவாயில் உள்ளன.

இந்நிலையில் தனுஷின் அடுத்த படம் பற்றிய புதிய தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஷ்ணு விஷாலை வைத்து ‘முண்டாசுப் பட்டி’ என்ற படத்தை இயக்கிய இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் அடுத்ததாக நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்