ஆப்நகரம்

AR Rahman: நீங்களும் பாடகர் ஆகலாம் - வாய்ப்பு கொடுக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்

தமிழ் திரைப்படங்களை தாண்டி, பாலிவுட், ஹாலிவுட் வரை தன் இசை சாம்ராஜ்யத்தை பரப்பி வைத்திருப்பவர் ஏ.ஆர் ரகுமான்.

Samayam Tamil 15 Sep 2018, 3:45 pm
தமிழ் திரைப்படங்களை தாண்டி, பாலிவுட், ஹாலிவுட் வரை தன் இசை சாம்ராஜ்யத்தை பரப்பி வைத்திருப்பவர் ஏ.ஆர் ரகுமான்.
Samayam Tamil AR Rahman.


ஏ ஆர் ரகுமானை பிக்காத இசைப் பிரியர்களே இருக்கமாட்டார்கள். இவரின் இசை ஒரு படத்திற்கு கூடுதல் பலத்தை தரக்கூடியது. இதனால் முக்கிய படங்களின் இயக்குனர்களின் தேர்வாக ஏ.ஆர் ரகுமான் தான் உள்ளார்.

கோலிவுட்டில் இவரின் கைவசம் ரஜியின் 2.0, விஜய்யின் ‘சர்கார்’, மணிரத்தினம் இயக்கும் ‘செக்கச் சிவந்த வானம்’, சிவகார்த்திகேயனின் சயின்ஸ் பிக்ஸன் படம் என வரிசை கட்டி உள்ளது.

பாட வாய்ப்பு:
தற்போது ஏ ஆர் ரகுமான் தனது டுவிட்டர் பக்கத்தில், “உங்களுக்கு இசையில் பேரார்வம் இருக்கிறதா? இருந்தால், நீங்கள் ஸ்டேஜ் ஏறுவதற்கான தருணம் இது. நாங்கள் ஒரு நல்ல நட்சத்திர பாடகரை தேடிக்கொண்டிருக்கிறோம். அது நீங்கள் தான் எனில், உங்களது முழு விவரங்களையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் --> http://bit.ly/arrivedwitharr தெரிவிக்கவும்” என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்