ஆப்நகரம்

பிக்பாஸ் சென்று அந்த பழக்கத்திற்கு அடிமையான இளம் நடிகை: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பகீர் பதிவு!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று புகைப்பழக்கத்திற்கு அடிமையானதாக நடிகை கூறிய விஷயத்தை, தன்னுடைய முகப்புத்தகத்தில் பகிர்ந்துள்ளார் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்.

Samayam Tamil 24 Apr 2021, 2:32 pm
தனியார் தொலைக்காட்சி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நூறு நாட்கள் வெளி உலக தொடர்புகள் எதுவும் இல்லாமல் போட்டியாளர்கள் இருப்பார்கள். இதனால் அவர்கள் பலவித மன அழுத்தத்திற்கு ஆளாவர்கள் என்ற கிசுகிசு எப்போதும் வருவதுண்டு. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண் போட்டியாளர் ஒருவர் மன அழுத்தத்தால் சிகரெட் பழக்கத்திற்கு ஆளானதை பற்றி தன்னுடைய முகப்புத்த்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்.
Samayam Tamil James-Vasanthan
James Vasanthan


இந்தியாவில் பல மொழிகளில் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழுக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டது. வெற்றிகரமாக நான்கு சீசன்களை கடந்த பிக்பாஸ் தற்போது ஐந்தாவது சீசனை ஜூன் மாதத்தில் துவங்கவுள்ளது. பிக்பாஸ்க்கு சென்றால் மக்கள் மத்தியில் பிரபலமாகி விடலாம், சோசியல் மீடியாவில் தனக்கென்று ரசிகர்களை சம்பாரித்து விடலாம் என்பதற்காகவே பிக்பாஸிற்கு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர் பல பிரபலங்கள்.

100 நாட்கள் வெளியுலக தொடர்பு இல்லாமல் ஒரே வீட்டில் சக போட்டியாளர்களை மட்டுமே பார்த்து கொண்டிருப்பதால் மன அழுத்தத்திற்கு உள்ளாக வேண்டியிருக்கும். இதனால் போட்டியாளர்களுக்கிடையே பல சண்டைகளும் ஏற்படும். அப்போது பிக்பாஸில் உள்ள ஸ்மோக்கிங் ரூமை போட்டியாளர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள். பிரைவசி காரணமாக அங்கு எடுக்கப்படும் வீடியோக்கள் நிகழ்ச்சியில் ஒளிப்பரப்பு செய்யப்படாது. அந்த வகையில் பிக்பாஸ் சென்று புகைப்பழக்கத்திற்கு அடிமையான இளம் நடிகை குறித்து தன்னுடைய முகப்புத்தகத்தில் பகிர்ந்துள்ளார் ஜேம்ஸ் வசந்தன்.

அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் மண்ணள்ளி போட்ட கொரோனா: வலிமை அப்டேட்டை ஒத்தி வைத்த போனி கபூர்!
இதுகுறித்து அவர் குறிப்பிட்டிருப்பதாவது, 'பிரபலமான அந்த திரைப்படக் கலைஞரான இளம்பெண்ணும் நானும் ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தோம். ஓட்டலில் இருந்து அந்த நிகழ்ச்சி இடத்துக்குச் செல்லும் வழியில் டீ குடிக்க வண்டியை நிறுத்தினார்கள். மற்றவர்கள் டீ குடிக்கச் சென்றார்கள். அவள் டீ குடிப்பதில்லை என்று சொல்லிவிட்டு, என்னிடம் கொஞ்சம் தயங்கியபடியே, "தயவுசெய்து தப்ப நெனச்சிக்காதிங்க.. நான் கொஞ்சம் அந்தப் பக்க்கம் போயி.." என்று கையில் இருந்த சிகரெட்டைக் காண்பித்துக் கெஞ்சுவது போல கண்ணாலேயே சைகை செய்தாள்.

நான் "ஹேய்.. அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனை இல்ல.."; என்று சொல்லி அனுப்பி வைத்தேன்.
புகையாற்றி, கொஞ்ச நேரம் கழித்துத் திரும்பி வந்த அவள் "Soooooory.." என்று நெளிந்தாள்.
"எதுக்கு?" என்றேன்.
"Shock இல்ல.. bit surprised. Didnt know that you smoke"என்றேன்.
எல்லாம் இந்த Bigg Boss-னால வந்தது. அந்த வீட்டுக்குள்ளப் போயிட்டு யாராவது சிகரெட் பிடிக்காம வெளிய வரமுடியுமா? என்றாள்.
அப்படியா? என்று ஆச்சரியப்பட்டேன்.
ஆமா. அங்கருக்க டென்ஷன்.. பிரஷ்ஷருக்கு இது ஒண்ணுதான் outlet. பாக்கெட் பாக்கெட்டா கிடைக்கும்
இதுக்கு முன்னாடி நீ ஸ்மோக் பண்ணதுல்ல?
நோ.. நெவர்!.. அந்த inclination கூட கெடயாது. பாவம்.. எங்கம்மாவுக்குத் தெரியாது
என்று அந்த இளம்பெணுடன் உரையாற்றியதை பற்றி பகிர்ந்துள்ளார் ஜேம்ஸ் வசந்தன்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்