ஆப்நகரம்

விவேகத்தால் மெர்சல் டீசர் பாதிப்பு: எடிட்டர் ரூபன் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

விவேகம் படத்தால் தளபதியின் மெர்சல் படத்தின் டீசர் தள்ளிப்போகியுள்ளதாக எடிட்டர் ரூபன் தெரிவித்துள்ளார்.

TNN 27 Aug 2017, 6:26 am
விவேகம் படத்தால் தளபதியின் மெர்சல் படத்தின் டீசர் தள்ளிப்போகியுள்ளதாக எடிட்டர் ரூபன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil mutual affection between thalas vivegam and thalapathys mersal team says editor antony ruben
விவேகத்தால் மெர்சல் டீசர் பாதிப்பு: எடிட்டர் ரூபன் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!


கடந்த 24ம் தேதி தல நடிப்பில் விவேகம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில், தற்போது உள்ள காலகட்டத்தில் அனைவருமே சினிமாவைப் பற்றி விமர்சனம் செய்யத் தொடங்கிவிட்டனர். இது சினிமாவுக்கு எதிரான விஷயங்களாக கருதப்படுகிறது. பணம் வாங்கியும் விமர்சனம் செய்கின்றனர். இப்படி உலகம் முழுவதும் தவறான விஷயங்களை மட்டும் பரப்புவதை குறிக்கோளாகக் கொண்டுள்ளது.

Glory to God😊❤️🙏🏻 #Vivegam #Mersal #ThalaThalapathy @directorsiva @Atlee_dir @SathyaJyothi_ @ThenandalFilms pic.twitter.com/ols0E2DRFH — Editor Ruben (@AntonyLRuben) August 26, 2017 இது எல்லாவற்றையும் விட, தல அஜித், தளபதி விஜய், இயக்குனர்கள் அட்லீ, சிவா, தயாரிப்பாளர்கள் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் ஆகியோரின் நல்ல எண்ணங்கள் மகிழ்ச்சியை கொடுக்கிறது. தன் படத்தின் டிரைலர் வருவதால் மற்றொருவரின் படம் பாதிக்கப்படக்கூடாது என்று அனைவரும் பார்த்து பார்த்து வேலை செய்கின்றனர். ஏனென்றால், மெர்சல் படத்தில் டீசர் வெளியாக இருந்த நிலையில், தல நடித்த விவேகம் படம் வெளியானது. இந்த நேரத்தில் தளபதி மெர்சல் வெளியானால், வசூல் பாதிக்கும் என்று கூறப்பட்டது. இதன் காரணமாக மெர்சல் படத்தின் டீசர் வெளியாவது தள்ளிப்போயுள்ளது என்று செய்தி வெளியிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்