ஆப்நகரம்

என் பிறந்தநாள் அன்று நீ இறந்துவிட்டாயே சேது: நண்பர் உருக்கம்

டாக்டர் சேதுராமனுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட கடைசி புகைப்படத்தை அவரின் நெருங்கிய நண்பரான டாக்டர் அஸ்வின் விஜய் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 29 Mar 2020, 11:30 am
டாக்டர் சேதுராமனுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட கடைசி புகைப்படத்தை அவரின் நெருங்கிய நண்பரான டாக்டர் அஸ்வின் விஜய் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
Samayam Tamil my birthday is the day you have left us sethu dr ashwin vijay
என் பிறந்தநாள் அன்று நீ இறந்துவிட்டாயே சேது: நண்பர் உருக்கம்


சேதுராமன்

கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் மூலம் பிரபலமான டாக்டர் சேதுராமன் மாரடைப்பால் மரணம் அடைந்தார். 36 வயதில் சேது இறந்துவிட்டதை நம்ப முடியாமல் பலரும் அதிர்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் சேதுவின் நெருங்கிய நண்பரான டாக்டர் அஸ்வின் விஜய் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உருக்கமான போஸ்ட் போட்டுள்ளார்.

கடைசி புகைப்படம்

இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் அஸ்வின் விஜய் கூறியிருப்பதாவது, இது தான் நாம் எடுத்துக் கொண்ட கடைசி புகைப்படம். நிறைய புகைப்படங்களை நான் எடுத்திருக்கணும். நான் என் பிறந்தநாள் என்று என மீடியாவிடம் சொன்னது இல்லை. ஆனால் மார்ச் 26ம் தேதி தான் நீ எங்களை விட்டுச் சென்ற நாளாகிவிட்டது என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

பிறந்தநாள்

என் பிறந்தநாள் அன்று நான் முதலில் அட்டென்ட் செய்தது உன் போன் காலை தான். மச்சான், கொரோனா லாக்டவுனால் இந்த வருடம் உனக்கு பிரெட் மட்டும் தான் வாங்கப் போகிறேன் என்று காமெடியாக சொன்னியே. ஆனால் அது தான் கடைசி அழைப்பு என்பது எனக்கு தெரியாமல் போய்விட்டது. இனி வரும் மார்ச் 26ம் தேதிகளை நினைத்துப் பார்க்கிறேன் என்று வேதனை அடைந்துள்ளார் விஜய்.

javascript-Instagram

View this post on Instagram @dr_sethu This was the last photo we took. I should have taken more. I have never declared my birthday on media ever but March 26th painfully has become the day you left us. Yours was the first phone call I answered on my birthday and you told me in a funny note “Machan, I am getting only bread for you to cut this year because of corona lockdown”. Did not realise that will be the last call. Imagine the upcoming years of March 26th’s. A post shared by Ashwin Vijay (@drashwinvijay) on Mar 27, 2020 at 6:05am PDT

வதந்தி

முன்னதாக சேதுராமன் கொரோனா வைரஸ் தாக்கி இறந்துவிட்டதாக வதந்தி பரவியது. இதை பார்த்த அஸ்வின் விஜய் தன் நண்பன் மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்றும், தேவையில்லாத வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் தெரிவித்தார். மேலும் சேதுவின் குடும்பத்தாருக்காக பிரார்த்தனை செய்யுமாறு அவரின் ரசிகர்களை அஸ்வின் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்