ஆப்நகரம்

“என் படத்தின் இன்றைய வசூல் மதிப்பு ரூ.5000 கோடி” : பாகுபலியை விமர்சிக்கும் இயக்குநர்!

“என் படத்தின் இன்றைய வசூல் மதிப்பு ரூ.5000 கோடி” : பாகுபலியை விமர்சிக்கும் இயக்குநர்!

TOI Contributor 24 May 2017, 5:39 am
பாகுபலி திரைப்படம் 1500 கோடி ரூபாய் வசூல் செய்து ஓடிக்கொண்டிருக்கையில், தன் படத்தைவிட பாகுபலி வசூல் குறைவுதான் என்று பாலிவுட் இயக்குநர் கருத்து தெரிவித்துள்ளார்.
Samayam Tamil my movie collection would be 5000 crores says director anil sharma
“என் படத்தின் இன்றைய வசூல் மதிப்பு ரூ.5000 கோடி” : பாகுபலியை விமர்சிக்கும் இயக்குநர்!


பாகுபலி படத்தின் 2ஆம் பாகம் உலகம் முழுவதும் வெளியாகி மிகப்பெரும் வெற்றி பெற்றுள்ளது. 1500 கோடி ரூபாய் கலெக்ஷனை தாண்டி, 2000 கோடி வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பாலிவுட் இயக்குநர் அனில் ஷர்மா பாகுபலி குறித்து விமர்சனம் செய்துள்ளார். இவர் இயக்கிய கத்தார் : ஏக் பிரேம் கதா எனும் படம் 2001ஆம் ஆண்டு வெளியானது. பாக் ஆபிஸில் பெரிய ஹிட்டான இந்தப்படம் 265 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது.

எனவே இது குறித்து கூறியுள்ள இயக்குநர் அனில் ஷர்மா, 2001ஆம் ஆண்டு டிக்கெட் விலை 25 ரூபாயாக இருந்தது. அதனால் கத்தார் : ஏக் பிரேம் கதா படம் 265 கோடி மட்டுமே வசூல் செய்தது. அதுவே இன்றைய காலத்தை வைத்து பார்க்கும் போது, கலெக்ஷன் மதிப்பு 5000 கோடியை தாண்டும் என்று கூறியுள்ளார். அதனால் என் படத்தின் சாதனையைவிட பாகுபலி சாதனை பெரியதல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்