ஆப்நகரம்

எனது அடுத்த படம் தமிழ் படம் தான்: இயக்குனர் அட்லி!

எனது அடுத்த படம் கண்டிப்பாக தமிழில்தான் இருக்கும் என்று இயக்குனர் அட்லி கூறியுள்ளார்.

Samayam Tamil 7 Apr 2018, 2:04 pm
எனது அடுத்த படம் கண்டிப்பாக தமிழில்தான் இருக்கும் என்று இயக்குனர் அட்லி கூறியுள்ளார்.
Samayam Tamil atlee


இயக்குனர் அட்லி தற்போது தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் வரிசையில் இணைந்து விட்டார். இவர் இயக்கிய மூன்று படங்களுமே வசூலிலும், மெகா ஹிட் படங்கள்தான்.

அந்த வகையில் ‘மெர்சல்’ படம் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம், என ஒரு சிலர் கூறி வந்தனர். அதற்கு படக்குழு எங்களுக்கு நஷ்டம் இல்லை என்று கூறி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது.

இந்த நிலையில் நேற்று இயக்குனர் அட்லி ஒரு விருது வழங்கும் விழாவில் பங்கேற்றார். அப்போது அவரிடம் பலரும் உங்களின் அடுத்த படம் தெலுங்கு என்று கூறி வருகிறார்களே அது உண்மையா என்று கேட்டனர். அதற்கு அட்லி ‘‘கண்டிப்பாக எனது அடுத்தப்படம் தமிழ் படம் தான், ஹீரோ யார் என்பது சர்ப்ரைஸாக வரும், அது மட்டுமின்றி தெலுங்கில் தான் படமெடுக்கவில்லை’’ என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்