ஆப்நகரம்

என் ட்விட்டர், இன்ஸ்டாவை ஹேக் செஞ்சுட்டாங்க: வரலட்சுமி சரத்குமார்

வரலட்சுமி சரத்குமாரின் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 3 Dec 2020, 1:32 pm
தமிழ் திரையுலகின் திறமையான நடிகைகளில் ஒருவர் வரலட்சுமி சரத்குமார். அவர் என்னதான் படங்களில் பிசியாக இருந்தாலும் ட்விட்டர், இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவாக இருப்பவர்.
Samayam Tamil varalaxmi


சினிமா மற்றும் நாட்டு நடப்பு குறித்து அவர் தெரிவிக்கும் கருத்துகளை தெரிந்து கொள்ளவே பலர் அவரை ட்விட்டரில் பின்தொடர்கிறார்கள். இந்நிலையில் வரலட்சுமியின் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து வரலட்சுமி சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

என் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் நேற்று இரவு ஹேக் செய்யப்பட்டுள்ளது. என்னால் அதை பயன்படுத்த முடியவில்லை.

என் கணக்குகளை திரும்பப் பெற சம்பந்தப்பட்ட குழுக்களுடன் டச்சில் இருக்கிறேன். ஆனால் இது சரியாக சில நாட்கள் ஆகும் போன்று.

அடுத்த சில நாட்களுக்கு என் ட்விட்டர் அல்லது இன்ஸ்டாகிராம் கணக்குகளில் இருந்து ஏதாவது மெசேஜ் வந்தால் கவனமாக இருக்க வேண்டும் என்று என் ஃபாலோயர்களை கேட்டுக் கொள்கிறேன்.

என் கணக்குகள் மீண்டும் கிடைத்ததும் நான் தெரிவிக்கிறேன். எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் உங்களை எல்லாம் மீண்டும் ஆன்லைனில் சந்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

பிரபலங்களின் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் ஹேக் செய்யப்படுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. கெரியரை பொறுத்தவரை வரலட்சுமி நடித்த டேனி படம் அண்மையில் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

கை நிறைய புதுப்படங்கள் வைத்திருக்கிறார் வரலட்சுமி. ரவி தேஜா, ஸ்ருதி ஹாசனுடன் சேர்ந்து வரலட்சுமி நடித்துள்ள கிராக் தெலுங்கு படம் சங்கராந்தி ஸ்பெஷலாக ரிலீஸாகவிருக்கிறது. வரலட்சுமி ஒரு படத்தில் நடித்தால் தன் நடிப்பை பற்றியே அனைவரையும் பேச வைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்ரா வெடிய, இது தளபதி பொங்கல்: ஜனவரி 13ம் தேதி மாஸ்டர் ரிலீஸ் உறுதி

அடுத்த செய்தி

டிரெண்டிங்