ஆப்நகரம்

ஆபாச வீடியோ கால்: அய்யோ அது நான் இல்லை, கதறும் டிவி நடிகை

டிவி நடிகை தேஜஸ்வி பிரகாஷின் வாட்ஸ்ஆப் கணக்கை ஒருவர் ஹேக் செய்து ஆபாச வீடியோ கால்கள் செய்துள்ளார்.

Samayam Tamil 6 Nov 2019, 3:12 pm
இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் தேஜஸ்வி பிரகாஷ். அவரின் வாட்ஸ்ஆப் கணக்கை ஒருவர் ஹேக் செய்து மோசமான வீடியோ கால்கள் செய்துள்ளார்.
Samayam Tamil tejasswi prakash


இது குறித்து தேஜஸ்வி கூறியிருப்பதாவது,

என் போனை ஹேக் செய்த நபர் என் கான்டாக் லிஸ்ட்டில் உள்ளவர்களிடம் நல்லபடியாக பேசி ஒரு லிங்க்கை அனுப்பி வைத்து அவர்களுக்கு வரும் கோடை தனக்கு அனுப்பி வைக்கச் சொல்கிறார். கோட் கிடைத்தவுடன் அவர் வாட்ஸ்ஆப் மூலம் வீடியோ கால் செய்கிறார்.

பட வாய்ப்புக்காக தனியாக வரச் சொன்னார்: பிரபல நடிகர் மீது விஜய் ஹீரோயின் புகார்

அந்த காலை அட்டென்ட் செய்தால் அவர் மோசமான சில விஷயங்களை செய்கிறார். நான் டிவி சீரியல் ஒன்றின் ஷூட்டிங்கில் இருந்தேன். செட்டில் இருந்தபோது திடீர் என்று எனக்கு ஒரு வீடியோ கால் வந்தது. அங்கு என்னை சுற்றி பலர் இருந்தார்கள்.

காலை அட்டென்ட் செய்தபோது ஆண் ஒருவர் நிர்வாணமாக நின்றார். அதை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன். தங்களுக்கும் இதுபோன்ற வீடியோ கால் வந்ததாக என் நண்பர்கள், சக கலைஞர்கள் பலர் தெரிவித்தனர்.

கோஹ்லி பிறந்தநாளில் நடந்த மறக்க முடியாத சம்பவம்: வைரல் போட்டோ

நண்பர்கள் எனக்கு போன் செய்து தெரிவித்தார்கள் சரி. என்னை அவ்வளவாக தெரியாத சக கலைஞர்கள் இந்த நிர்வாண வீடியோ கால்களை பார்த்து என்னை பற்றி என்ன நினைப்பார்கள்?.

நான் சைபர் குற்றப்பிரிவு போலீசாரை அணுகினேன். அவர்கள் என் வீட்டிற்கு அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு தெரிவித்தனர் என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்