ஆப்நகரம்

மீண்டும் படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் மிஷ்கின்: வேகமெடுக்கும் 'பிசாசு 2' படத்தின் படப்பிடிப்பு!

மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிக்கும் பிசாசு 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கலில் துவங்கியுள்ளது.

Samayam Tamil 23 Jul 2021, 9:28 pm
மிஷ்கினின் அடுத்த படைப்பாக பிசாசு 2 திரைப்படம் உருவாகி வருகிறது. சைக்கோ படத்தின் வெற்றிக்கு பிறகு துப்பறிவாளன் 2 திரைப்படத்தை இயக்க இருந்தார் மிஷ்கின். அப்போது நடிகர் விஷாலுடன் ஏற்பட்ட மன கசப்பு காரணமாக படத்திலிருந்து விலகினார். இதனை தொடர்ந்து இயக்குனர் மிஷ்கின் தற்போது ஆண்ட்ரியா நடிப்பில் பிசாசு 2 படத்தை இயக்குகிறார்.
Samayam Tamil Pisasu 2
Pisasu 2


மிஷ்கின் இயக்கத்தில் வெளியான பிசாசு திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது பிசாசு 2 திரைப்படத்தை இயக்குவதில் மும்முரம் காட்டி வருகிறார் மிஷ்கின். ஆண்ட்ரியாவை பிரதானமாக கொண்டு இந்த படத்தின் திரைகதை அமைக்கப்பட்டுள்ளது. பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை ராக்போர்ட் எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. கார்த்திக் ராஜா இசையமைக்கிறார்.

ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. போஸ்டரில் இடம்பெற்ற நடிகை ஆண்ட்ரியாவின் தோற்றம் ஹாலிவுட் பாணியில் ஒரு பேய் படம் என்பதை போல் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஜெய் பீம்: அநீதிக்கு எதிராக சாட்டையை சுழற்ற தயாராகும் சூர்யா!
திண்டுக்கலில் நடைபெற்ற பிசாசு 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கு காரணமாக பாதியிலே நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளதால் திரைத்துறை சார்ந்த பணிகள் வழக்கம் போல நடைபெற துவங்கியுள்ளன. அந்த வகையில் பிசாசு 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கலில் உள்ள மீனாட்சிநாயக்கம்பட்டி மீண்டும் துவங்கியுள்ளது.


பிசாசு 2 படத்தில் அண்மையில் நமீதா கிருஷ்ணமூர்த்தி இணைந்ததாக தகவல்கள் வெளியாகின. இவர் தமன்னா நடிப்பில் வெளியான நவம்பர் ஸ்டோரி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர். மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி பேய் ஓட்டுபவர் ரோலில் நடிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் பிசாசு 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்