ஆப்நகரம்

சர்ச்சையில் சிக்கிய மிஷ்கினின் அடுத்த படம் ‘பிதா’

மிஷ்கின் அடுத்து தயாரிக்கவுள்ள பிதா என்ற படம் சர்ச்சையில் சிக்கி உள்ளது.

Samayam Tamil 10 Jul 2020, 3:22 pm
சவரக்கத்தி படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான ஆதித்யா என்ற இயக்குனர் அடுத்து இயக்க உள்ள படம் 'பிதா'. இந்த படத்தினை மிஷ்கின் மற்றும் ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மற்றும் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்க உள்ளது என்று அறிவிப்பு அப்போது வெளியானது.
Samayam Tamil Pitha Movie Poojai


இந்த படத்தில் மதியழகன், 2018ல் மிஸ் இந்தியா பட்டம் வென்ற அணுக்ரிதி வாஸ், ரமேஷ் திலக், ராதாரவி உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர். இந்த படத்தின் பூஜை சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது இந்த படம். பிதா படத்திற்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் அவர்கள் குறிப்பிட்டிருப்பதாவது..

ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் பிதா என்ற படத்தின் பிரமோஷன் புகைப்படங்களில் எங்களது கம்பெனியின் லோகோ பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிகிறோம். இந்த குறிப்பிட்ட படத்தில் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் எந்த விதத்திலும் ஈடுபடவில்லை மற்றும் தொடர்பிலும் இல்லை. இந்த பிரமோஷன் புகைப்படங்களை எங்களுடைய லோகோ மற்றும் பெயருடன் இனியும் பரப்ப வேண்டாம் என பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்" என அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.


அருண் விஜய் நடிக்கும் பாக்ஸர் படத்தில் வில்லனாக நடிக்கும் தயாரிப்பாளர் மதியழகன் தான் பிதா படத்திலும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சர்ச்சை பற்றி விளக்கம் அளித்துள்ள தயாரிப்பாளர் மதியழகன், 'இந்த படத்தில் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் எந்த விதத்திலும் ஈடுபடவில்லை' என்று கூறியுள்ளார். மேலும் அவர்களது லோகோவை தற்செயலாக பயன்படுத்தியதற்கு மன்னிப்பும் கேட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட குழப்பத்திற்காகவும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். இது போன்ற தவறுகள் வருங்காலத்தில் நடக்காமல் இருப்பதற்காக தேவைப்படும் நடவடிக்கைகளை நிச்சயம் எடுப்போம் என்றும் மதியழகன் கூறியுள்ளார்.

ஏற்கனவே மிஷ்கினின் முந்தைய படமான துப்பறிவாளன் 2 சர்ச்சையில் சிக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. மிஷ்கின் இயக்கி வந்த அந்த படத்தின் ஷூட்டிங் லண்டன் உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றது. பெரும்பகுதி ஷூட்டிங் முடிவு பெற்ற நிலையில், இந்த படத்தின் பட்ஜெட் அதிகரித்துவிட்டது மற்றும் சம்பளம் தொடர்பான பிரச்சனைகள் எழுந்ததால் விஷாலுடன் மிஷ்கினுக்கு வேறுபாடு ஏற்பட்டது. அதன் பின்னர் மிஷ்கின் அந்த படத்தில் இருந்து வெளியேறிவிட்டார்.

அதற்குப் பிறகு விஷால் தானே இயக்குனராக மாறி மீதமிருக்கும் படத்தை இயக்கப் போவதாக தெரிவித்துள்ளார். கொரோனா லாக் டவுன் முடிந்த பிறகு அதன் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்