ஆப்நகரம்

'நாச்சியார்': சைக்கோ கொலையாளி ஜெயப்பிரகாஷின் கதையா?

இயக்குனர் பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்து வரும் 'நாச்சியார்' திரைப்படம் சைக்கோ கொலையாளி ஜெயப்பிரகாஷின் கதை என்பதை ஏற்க படக்குழு மறுப்புத் தெரிவித்துள்ளது.

Hindustan Times 3 Mar 2017, 2:05 pm
சென்னை: இயக்குனர் பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்து வரும் 'நாச்சியார்' திரைப்படம் சைக்கோ கொலையாளி ஜெயப்பிரகாஷின் கதை இல்லை என படக்குழு மறுப்புத் தெரிவித்துள்ளது. ஏற்க படக்குழு மறுப்புத் தெரிவித்துள்ளது.
Samayam Tamil naachiyaar is balas jyothika starrer based on psycho killer jayaprakash
'நாச்சியார்': சைக்கோ கொலையாளி ஜெயப்பிரகாஷின் கதையா?


சென்னையில், கடந்த 1980-களில் தனது குடும்பத்தைச் சேர்ந்த 9 பேரை கொடூரமாக கொலை செய்த சைக்கோ கொலையாளி ஜெயப்பிரகாஷின் கதை தான் 'நாச்சியார்' என செய்திகள் வெளியாகின. இந்நிலையில், இந்தச் செய்தி முற்றிலும் வதந்தி என்று கூறிய படக்குழு, 'நாச்சியார்' கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ஜோதிகாவின் தைரியமான வாழ்க்கை பயணம் பற்றிய கதை. இதில் ஜி.வி.பிரகாஷ் குற்றவாளி. இப்படம் உண்மை சம்பவம் அல்ல என்று விளக்கம் அளித்துள்ளனர்.

இசைஞானி இளையராஜா இசையமைப்பில் உருவாகும் இப்படத்தில் ஜோதிகா தைரியமான காவல்துறை அதிகாரியாக நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் படப்பிடிப்புகள் சென்னையில் துவங்கியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் பூஜை விழா நடைபெற்றது. இதில் சூர்யா, ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ்குமார், நடிகர் சிவகுமார், இயக்குனர் ஏ.எல்.விஜய் உள்ளிட்டோர் கலந்துக்க கொண்டனர்.

Grapevine has been abuzz with reports that director Bala’s next film Naachiyaar, which has Jyothika playing the titular role, is based on the life of psycho killer Jayaprakash, the man who was found guilty for the cold-blooded murder of nine of his family members in Valasaravakkam, Chennai in the mid-1980s.

அடுத்த செய்தி

டிரெண்டிங்