ஆப்நகரம்

கெளதம் மேனன் இயக்கத்தில் நடிக்க தயாராகும் சிம்பு: விரைவில் படப்பிடிப்பு துவக்கம்!

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள நதிகளிலே நீராடும் சூரியன் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் சென்னையில் துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 8 Jul 2021, 1:25 pm
விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு சிம்பு கெளதம் மேனன் காம்போவிற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து இருவரும் கூட்டணியில் வெளியான 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் மூன்றாவது முறையாக சிம்பு, கெளதம் கூட்டணி இணைய உள்ளது.
Samayam Tamil Silambarasan
Silambarasan


வருண் நடிப்பில் 'ஜோஷ்வா' படத்தை இயக்கி முடித்துள்ளார் கெளதம் மேனன். இந்த படத்தை தொடர்ந்து தற்போது சிலம்பரசன் நடிப்பில் நதிகளிலே நீராடும் சூரியன் திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்த இரண்டு படங்களையுமே வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக சிம்பு, கெளதம் கூட்டணிக்கு இசையமைக்கவுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.

இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது கொரோனா அச்சுறுத்தல் குறைந்து வருவதால் மறுபடியும் திரைத்துறை சம்பந்தமான பணிகள் துவங்கியுள்ளன. இந்நிலையில் தற்போது சென்னையில் நதிகளிலே நீராடும் சூரியன் திரைப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க ஆயத்தமாகி வருகின்றனர் படக்குழு.

படைப்பாளிகள் பயப்படும் சூழ்நிலை ஏற்படும்: நடிகர் சத்யராஜ் கண்டனம்!
இந்த படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு 10 நாட்கள் மட்டுமே நடைபெறவுள்ளது. அதற்குப் பிறகு புதுச்சேரியில் சில முக்கிய காட்சிகளைப் படமாக்க திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். இந்த படத்தில் பணியாற்ற உள்ள மற்ற நடிகர், நடிகைகளின் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதனிடையில் சில்லுனு ஒரு காதல் திரைப்பட இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார் சிம்பு. இந்த படத்தில் கெளதம் கார்த்திக், டீஜே, பிரியா பவானி சங்கர்,மனுஷ்ய புத்திரன், கலையரசன் உள்ளிட்டோரும் நடிக்க உள்ளனர். கடந்த ஜனவரி மாதம் வெளியான இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்