ஆப்நகரம்

நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் செல்லாது: ராதிகா சரத்குமார் கருத்து

சென்னை தி.நகரில் இன்று பிற்பகல் நடைபெற்ற நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் செல்லாது என நடிகை ராதிகா சரத்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

TNN 27 Nov 2016, 6:36 pm
சென்னை: சென்னை தி.நகரில் இன்று பிற்பகல் நடைபெற்ற நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் செல்லாது என நடிகை ராதிகா சரத்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
Samayam Tamil nadigar sangam general body meeting is invalid says radhikaa sarathkumar
நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் செல்லாது: ராதிகா சரத்குமார் கருத்து


தென்னிந்திய நடிகர் சங்க பொதுக் குழுகூட்டத்தின் ஒப்புதலுடன் முன்னாள் நடிகர் சங்க நிர்வாகிகள் சரத்குமார் மற்றும் ராதாரவி ஆகியோர் நிரந்தரமாக சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

நடிகர் சங்க செயலாளர் விஷாலின் அறிவிப்புக் குறித்து கருத்து தெரிவித்த நடிகை ராதிகா சரத்குமார், சட்டப்படி இந்த பொதுக்குழு கூட்டம் செல்லாதபோது, விஷாலின் அறிவிப்பும் செல்லாது. தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து விஷால் நீக்கப்பட்டதால் அதனை திசைதிருப்பும் நோக்கில் இந்த முடிவை அறிவித்துள்ளதாக ராதிகா சாடியுள்ளார்.

மேலும், நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தங்களுக்கு வரவில்லை. அறிவிப்பு வந்தால் அதனை சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம் என ராதிகா தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்