ஆப்நகரம்

’நடிகையர் திலகம்’ படத்திற்கு யூ- சான்றிதழ்

மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்கையை தழுவி உருவாக்கப்பட்டுள்ள நடிகையர் திலகம் படத்திற்கு ’யூ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 5 May 2018, 4:24 pm
மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்கையை தழுவி உருவாக்கப்பட்டுள்ள நடிகையர் திலகம் படத்திற்கு ’யூ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
Samayam Tamil b06fbac1-9790-4b55-8b7a-345a511d921c.
’நடிகையர் திலகம்’ படத்திற்கு யூ- சான்றிதழ்


1960-கள் தொடங்கி பல ஆண்டுகள் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சாவித்ரி. இவரது வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய சம்பவங்களை அடிப்படையாக வைத்து நாக் ஆஸ்வின் இயக்கியுள்ள படம் ’நடிகையர் திலகம்’.

வரும் 9ம் தேதி வெளிவரும் இப்படத்திற்கு ’யூ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், ’நடிகையர் திலகம்’ திரைப்படம் தெலுங்கில் ‘மகாநடி’ என்று பெயரிலும் வெளிவருவது குறிப்பிடத்தக்கது.

சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள நிலையில், நடிகை சாவித்ரியின் கணவரான நடிகர் ஜெமினி கணேசன் வேடத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் நாக சைத்தன்யா, சமந்தா, விஜய் சாய் உட்பட பல தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான ’நடிகையர் திலகம்’ படத்திற்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தவிர, சாவித்ரியின் குடும்பத்தினர் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியிலும் பெரிய எதிர்பார்ப்பை இப்படம் பெற்றுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்