ஆப்நகரம்

‘நாடோடிகள்-2’ பூஜையுடன் தொடங்கியது!

சமுத்திரக்கனி இயக்கவிருக்கும் ‘நாடோடிகள்-2’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.

Samayam Tamil 27 Jan 2018, 3:29 pm
சமுத்திரக்கனி இயக்கவிருக்கும் ‘நாடோடிகள்-2’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.
Samayam Tamil nadodigal 2 movie stats with pooja
‘நாடோடிகள்-2’ பூஜையுடன் தொடங்கியது!


சமுத்திரக்கனி இயக்கத்தில் 2009ல் வெளியான படம் ‘நாடோடிகள்’. இந்த படத்தில் சசிக்குமார், விஜய் வசந்த், பரணி, அனன்யா, அபிநயா, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். நட்பை மையப்படுத்தி, நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகிய இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில், ‘நாடோடிகள்’ படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாக இருக்கிறது. இதில் சசிகுமார் & அஞ்சலி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அதுல்யா ரவி, பரணி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

நாடோடிகள் பிலிம்ஸ் மற்றும் இன்ஸ்பைர் என்டர்டெயின்மென்ட் இணைந்து மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியிருக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்