ஆப்நகரம்

மீண்டும் தாத்தா வேடத்தில் நடிக்கும் பேரன்!

தாத்தா நாகேஸ்வரராவ் வேடத்தில் நடிக்கிறார் பேரன் நாக சைதன்யா.

Samayam Tamil 25 Jun 2018, 5:07 pm
தாத்தா நாகேஸ்வரராவ் வேடத்தில் நடிக்கிறார் பேரன் நாக சைதன்யா.
Samayam Tamil naga chaitanya


பிரபல நடிகர் பாலகிருஷ்ணாவின் தந்தையும், முன்னாள் முதல்வருமான என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாறு படமாகி வருகிறது. இந்தப் படத்தின் தந்தை என்.டி.ஆர். கேரக்டரில் மகன் பாலகிருஷ்ணா நடிக்கிறார். இந்தப் படத்தில் என்.டி.ஆரின். நண்பராக அந்த காலத்தில் இருந்தவர் நடிகர் நாகேஸ்வரராவ். இவரின் பேரன்தான் நாக சைதன்யா. இந்தப் படத்தில் நாகேஸ்வரராவ் கேரக்டரில் பேரன் நாக சைதன்யா நடிக்கிறார். இந்தப் படத்தை கிரிஷ் இயக்கி வருகிறார்.

அதாவது, என்.டி.ஆர், நாகேஸ்வரராவ் ஆகிய இருவருமே சமகாலத்து நடிகர்கள். அவர்கள் இருவரும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இதனால் என்டிஆரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நாகேஸ்வரராவ் சம்பந்தப்பட்ட காட்சிகளும் இடம்பெறுகிறது.

மேலும், ஏற்கனவே சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படமான மகாநதியில் தனது தாத்தா நாகேஸ்வரராவ் வேடத்தில் நடித்துள்ள நாகசைதன்யா, இப்போது என்டிஆர் வாழ்க்கை வரலாறு படத்திலும் மீண்டும் தாத்தாவின் வேடத்தில் நடிக்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்