ஆப்நகரம்

சூப்பர் ஸ்டார் பட இயக்குநர் மீது செம கடுப்பில் இருக்கும் சம்மு மாமனார்?

நாக சைதன்யா படத்தை ஓரம் கட்டிவிட்டு மகேஷ் பாபுவை வைத்து படம் எடுக்கப் போகும் இயக்குநர் பரசுராம் மீது நாகர்ஜுனா கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

Samayam Tamil 9 Apr 2020, 2:29 pm
நாக சைதன்யா படத்தை ஓரம் கட்டிவிட்டு மகேஷ் பாபுவை வைத்து படம் எடுக்கப் போகும் இயக்குநர் பரசுராம் மீது நாகர்ஜுனா கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
Samayam Tamil nagarjuna upset with parasuram over nc20
சூப்பர் ஸ்டார் பட இயக்குநர் மீது செம கடுப்பில் இருக்கும் சம்மு மாமனார்?



மகேஷ் பாபு

விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகா மந்தனா ஆகியோரை வைத்து கீத கோவிந்தம் படத்தை இயக்கிய பரசுராம் அடுத்ததாக நாக சைதன்யாவை வைத்து படம் எடுப்பதாக இருந்தது. தற்போதைக்கு என்.சி. 20 என்று அழைக்கப்படும் அந்த படத்தின் போட்டோஷூட் பணி துவங்க வேண்டியது. இந்நிலையில் பரசுராமோ நாக சைதன்யா படத்தை கிடப்பில் போட்டுவிட்டு மகேஷ் பாபுவை வைத்து படம் இயக்க தயாராகி வருகிறார். அந்த படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கப் போகிறாராம்.

நாக சைதன்யா

என்.சி. 20 படம் கைவிடப்பட்டதாக இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை. ஆனால் பரசுராம் மகேஷ் பாபு பட வேலையில் பிசியாகிவிட்டாராம். இது குறித்து அறிந்த நாக சைதன்யாவின் அப்பாவும், நடிகருமான நாகர்ஜுனா பரசுராம் மீது கடும் கோபத்தில் இருக்கிறாராம். என்.சி. 20 படம் குறித்து பரசுராம் முறையாக திட்டமிடாமல் நேரத்தை வீணாக்கிவிட்டாராம். இதனால் தான் என்.சி. 20 படப்பிடிப்பு துவங்குவதில் தாமதம் ஏற்பட்டதாம். இந்த காரணத்தாலும் நாகர்ஜுனா கோபம் அடைந்துள்ளாராம்.

லவ் ஸ்டோரி

நாக சைதன்யா சேகர் கம்முலா இயக்கத்தில் லவ் ஸ்டோரி படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருக்கிறார். தெலுங்கு சினிமா ரசிகர்கள் இந்த படத்தை பெரிதும் எதிர்பார்க்கிறார்கள். சேகர் கம்முலா முன்னதாக சாய் பல்லவியை வைத்து ஃபிதா படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. நாக சைதன்யா படப் பிரச்சனை ஒரு பக்கம் இருக்க மறுபக்கமோ அவரின் மனைவி சமந்தா கர்ப்பம் என்று பேசப்படுகிறது.

சமந்தா

சும்மா இருக்கும் நேரத்தில் ட்விட்டரில் ஆக்டிவாக இருந்த சமந்தா ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருந்தும் அந்த பக்கமே வரவில்லை. இன்ஸ்டாகிராமிலும் எதுவும் போஸ்ட் செய்யவில்லை. இதனால் சமந்தா கர்ப்பமாக இருக்கிறார், ஓய்வு எடுப்பதால் சமூக வலைதளங்கள் பக்கம் வரவில்லை என்று பேசப்படுகிறது. ஆனால் இதை சமந்தாவோ, அவரின் குடும்பத்தாரோ இதுவரை உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்