ஆப்நகரம்

‘நாகேஷ் திரையரங்கம்’ படத்துக்கு 19 இடத்தில் வெட்டு!

‘நாகேஷ் திரையரங்கம்’ பேய் படத்துக்கு 19 இடங்களில் தணிக்கைக்குழு வெட்டு கொடுத்துள்ளது.

Samayam Tamil 13 Feb 2018, 4:04 pm
‘நாகேஷ் திரையரங்கம்’ பேய் படத்துக்கு 19 இடங்களில் தணிக்கைக்குழு வெட்டு கொடுத்துள்ளது.
Samayam Tamil nagesh thiraiyarangam movie cut and edited in 19 secene
‘நாகேஷ் திரையரங்கம்’ படத்துக்கு 19 இடத்தில் வெட்டு!


நடிகர் ஆரி கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘நாகேஷ் திரையரங்கம்’. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகைகள் ஆஷ்னா சவேரி, அதுல்யா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் காளி வெங்கட், மாசும் சங்கர், சித்தாரா உட்பட பலர் நடித்துள்ளனர். இதுவரை வந்த பேய் படங்களிலிருந்து புதிய கோணத்தில் படத்தின் திரைக்கதையை அமைத்து இயக்கியிருக்கிறர் இசாக்.

ஏற்கனவே இவர் ‘அகடம்’ படத்தை இயக்கி கின்னஸ் சாதனையில் இடம் பிடித்தவர். இந்தப் படத்திற்கு அவரே ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். படத்துக்கு நவுஷத் இசையமைத்துள்ளார். படத்தை ராஜேந்திர எம்.ராஜன் தயாரித்துள்ளார்.

சமீபத்தில் இந்தப் படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த அதிகாரிகள் 19 இடத்தில் கட் கொடுத்தனர். முதலில் சில காட்சிகளை அனுமதிக்க கேட்ட இயக்குனர் பின்னர் கட்களுக்கு ஒப்புக்கொண்டார். இதையடுத்து படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்